திருவட்டார், காதலி பேச மறுத்ததால் விரக்தி அடைந்து தனியார் மருத்துவமனை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவட்டாரை அடுத்த தச்சூர் குன்றுவிளையை சேர்ந்தவர் ஜார்ஜ் மகன் விஷ்ணு நந்தன் (வயது 23). சுங்கான்கடையில் உள்ள தனியார் மருத்துவமனையில் டெக்னீஷியனாக வேலை பார்த்து வந்த இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் விஷ்ணு நந்தன் தனது காதலியிடம் பேச அவரை போனில் அழைத்துள்ளார். ஆனால் அந்த பெண் பேச விருப்பம் இல்லை என்று கூறிவிட்டு விஷ்ணு நந்தனின் செல்போன் அழைப்பை துண்டித்துவிட்டதாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த அவர் இதுபற்றி தனது நண்பரிடம் கூறி உள்ளார். பின்னர் விஷ்ணுநந்தன் இரவில் வீட்டின் அருகில் உள்ள பழைய வீட்டில் தூங்க சென்றார். தூக்குப்போட்டு தற்கொலை நேற்று காலையில் அவரது தாய் சென்று பார்த்தபோது வீட்டின் கதவு திறக்கவில்லை. பின்னர் ஜன்னல் வழியாக பார்த்தபோது அறையில் விஷ்ணுநந்தன் சேலையில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது பற்றிய தகவல் அறிந்த திருவட்டார் போலீசார் விரைந்து சென்று விஷ்ணுநந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/desperate-because-his-girlfriend-refused-to-talk-private-hospital-employee-commits-suicide-by-hanging




