புதுடெல்லி கேரளாவின் பெயரை கேரளம் என மாற்றும் சட்ட மசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரில் டெல்லி மாணவர் போராட்டத்தின்போது நடந்த தடியடி, அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தி வருகின்றனர். மசோதா தாக்கல் இந்த சூழலில், மத்திய உள்விவகார துறைக்கான இணை மந்திரி நித்யானந்த ராய், எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே, மக்களவையில், கேரள (பெயர் மாற்றம்) மசோதா, 2016 என்ற கேரள மாநிலத்திற்கான பெயர் மாற்றம் தொடர்பான மசோதாவை நேற்று தாக்கல் செய்து பேசினார். 2024-ம் ஆண்டு ஜூனில் இந்த பெயர் மாற்றம் தொடர்பாக கேரள மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டு இருந்தது. அது மத்திய அரசுக்கு, கேரள அரசால் அப்போது அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. 2 ஆண்டுகளுக்கு முன் முன்னெடுக்கப்பட்ட இந்த தீர்மானத்தின்படி, கேரளாவானது, கேரளம் என அழைக்கப்படும். இதுபற்றி அவையில் பேசிய மத்திய மந்திரி நித்யானந்த ராய், இந்த மசோதாவானது, கேரள மாநிலத்திற்கான பெயர் மாற்றத்தினை வழங்குவதுடன், அரசியல் சாசன பிரிவுகளில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வதற்கான விசயங்களையும் கொண்டுள்ளது. இதன்படி, அரசியல் சாசன பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார். குரல் வாக்கெடுப்பு இந்த நிலையில், இந்த மசோதாவுக்கு அவையில் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, மசோதா நிறைவேறி உள்ளது. இதேபோன்று, தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழக (திருத்த) மசோதா, 2026 இன்று அவையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மசோதாவை மத்திய இணை மந்திரி மொஹல் முரளிதர் தாக்கல் செய்து பேசினார். இதன்பின்னர் அது பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. ஆதரிப்போர் கையை உயர்த்துக என மக்களவை தலைவர் கிருஷ்ண பிரசாத் தென்னட்டி கூறினார். இதன்படி, குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியது. இந்த சூழலில் அவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/bill-to-change-keralas-name-to-kerala-passed-in-lok-sabha




