விந்தோக், நமீபியா, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியுள்ளது. நமீபியா - தென் ஆப்பிரிக்கா நமீபியா தலைநகர் விந்தோக் நகரில் நடைபெற முதல் போட்டியில் நமீபியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. நமீபியா 163 ரன்கள் இதையடுத்து, களமிறங்கிய நமீபியா 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜன் பிரைலிங்க் அதிகபட்சமாக 60 ரன்கள் குவித்தார். சிறப்பாக பந்து வீசிய தென் ஆப்பிரிக்க வீரர் பிரநீலன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நமீபியா வெற்றி இதையடுத்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க வீரர்கள் நமீபியா பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் டெவால்ட் பிரெவிஸ் அதிகபட்சமாக 75 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நமீபியா அபார வெற்றிபெற்றது. சிறப்பாக பந்து வீசிய நமீபியா வீரர்கள் ரூபன், ஸ்மித் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/cricket/tri-series-t20-namibia-stun-south-africa




