சென்னை, ‘ராக்கா’ படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி வில்லி கதாபாத்திரத்தில் இனைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘ராக்கா’ அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குநர் அட்லீ இயக்கி வரும் திரைப்படம் ‘ராக்கா’. பான்-இந்தியா படமாக உருவாகி வரும் இப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னணி நடிகைகள் பட்டாளம் இப்படத்தில் ஏற்கனவே தீபிகா படுகோன் இணைந்துள்ளநிலையில், ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாகூர் மற்றும் ஜான்வி கபூர் உள்ளிட்ட நடிகைகளும் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிரட்டலான வில்லி கதாபாத்திரம்? ‘ராக்கா’ படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி முற்றிலும் மாறுபட்ட மிரட்டலான வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், இதை படக்குழு அதிகாரபூர்வமாக உறுதி செய்யவில்லை. விரைவில் தொடங்கும் அடுத்தகட்ட படப்பிடிப்பு ‘ராக்கா’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் ஐதராபாத்தில் தொடங்கவுள்ளதாக தெரிகிறது. மேலும், ஐஸ்வர்யா லட்சுமி தற்போது ‘சம்பரால ஏடிகட்டு’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/famous-actress-joins-the-movie-raaka-is-she-playing-a-villainous-role




