டுப்லின், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 3-0 ஆப்கானிஸ்தான் முன்னிலை அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து நடந்த 3 ஒருநாள் போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் ஆப்கானிஸ்தான் கைப்பற்றியுள்ளது. கடைசி ஒருநாள் போட்டி இந்நிலையில், அயர்லாந்து - ஆப்கானிஸ்தான் இடையேயான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டில் இன்று நடைபெற்று வருகிறது. பெல்பாஸ்ட் நகரில் உள்ள மைதானத்தில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து அயர்லாந்து முதலில் பேட்டிங் செய்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி அயர்லாந்து 2.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/cricket/last-odi-against-ireland-afghanistan-opts-to-bowl




