சென்னை, நாடு முழுவதும் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடந்த 2011-ம் ஆண்டில் நாடு தழுவிய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் பிறகு 2021-ம் ஆண்டில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக கணக்கெடுப்பு பணி தள்ளிவைக்கப்பட்டது. தமிழகத்தில் கணக்கெடுப்பு இந்நிலையில், தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம். முதன்முறையாக டிஜிட்டல் முறையில் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 30 வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வீடு வீடாக சென்று விபரங்கள் சேகரிக்க உள்ளனர். இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது 33 கேள்விகள் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இளையராஜா வேண்டுகோள் இந்த நிலையில், மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என இளையராஜா வேண்டுகோள் விடுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது, இசை மனிதர்களை ஒன்றிணைப்பதைப் போல, மக்கள் தொகைக் கணக்கெடுப்பும் நாட்டின் முன்னேற்றத்திற்கு உறுதியான அடித்தளத்தை அமைக்கிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027-இல் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். சுயக் கணக்கெடுப்பு (Self-Enumeration) 17.07.2026 முதல் 31.07.2026 வரை நடைபெறுகிறது. இந்தக் காலப்பகுதியில் என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் தங்களது குடும்ப விவரங்களை சுயமாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். அதனைத் தொடர்ந்து 01.08.2026 முதல் 30.08.2026 வரை நடைபெறும் வீட்டுப் பட்டியலிடல் (HLO) கட்டத்தில் வருகை தரும் கணக்கெடுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறேன். துல்லியமான மக்கள்தொகைத் தகவல்கள் நாட்டின் சிறந்த திட்டமிடல் மற்றும் வளர்சிக்கு அடிப்படையாக அமைகின்றன. அனைவரும் இணைந்து மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027-ஐ வெற்றிகரமாக நடத்துவோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/census-2027-ilaiyaraaja-urges-the-public-to-participate-enthusiastically




