திருவள்ளூர், நாகர்கோவில்ல நீதிமன்ற காவலில் கைதி மரணம் அடைந்த சம்பவத்தில தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் உறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;- “நாகர்கோவிலில் கைதி உயிரிழந்த சம்பவத்தில், குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது, முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதிகார அத்துமீறலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம். இந்த விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. சிறைத்துறையில் காவலர்கள் கடும் மன அழுத்தத்தில் உள்ளனர். அவர்களுக்கு பல ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லை. காவல்துறைக்கு ஈடாக ஊதியமும் வழங்கப்படவில்லை. அனைத்தையும் சரிசெய்வதற்கான வேலைகளை செய்ய வேண்டியுள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/nagercoil-prisoners-death-minister-nirmal-kumar-assures-strict-action-will-be-taken




