கோயம்புத்தூர், கோயம்புத்தூரில் உள்ள இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை மையத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மனித வனவிலங்கு மோதல் குறித்த திறன்சார் மையத்தை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை மந்திரி பூபேந்தர் யாதவ் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, மனித வனவிலங்கு மோதல் குறித்த தேசிய பயிலரங்கையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மந்திரி தெரிவித்ததாவது:- சிறு, சிறு குடியிருப்புகள், நில பயன்பாட்டு முறையில் மாற்றம், மனித செயல்பாடுகளின் விரிவாக்கம் போன்றவற்றால் மனிதர்களுக்கும், வனவிலங்குகளுக்கும் இடையேயான மோதல்கள் அதிகரிப்பது, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி சவால்களாக மாறியுள்ளது. நமது அணுகுமுறை என்பது நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தீர்வு சார்ந்ததாக இருக்க வேண்டுமே தவிர, பிரச்சனையை ஏற்படுத்துவதாக இருக்கக்கூடாது. விழிப்புணர்வு புலிகள், சிறுத்தைகள், யானைகள் சரணாலயங்களுக்கு வெளியே மனிதர்களுடன் அவற்றுக்கு ஏற்படும் மோதல்களை தடுக்க கொள்கை ஒன்றை உருவாக்குவதில் இந்த நிறுவனம் கவனம் செலுத்த வேண்டும். மனிதர்களுக்கும், வனவிலங்குகளுக்கும் இடையே ஏற்படும் மோதலை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து நகர்ப்பகுதிகளிலும், ஊரகப்பகுதிகளிலும் இயக்க ரீதியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். இவ்வாறு அதில் கூறினார். இதில் நாடு முழுவதிலுமிருந்து கொள்கை வகுப்பாளர்கள், வன நிர்வாகிகள், அறிவியலாளர்கள், ஆய்வாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை இணைமந்திரி கீர்த்திவர்தன் சிங் பங்கேற்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/bhupender-yadav-inaugurated-a-centre-of-excellence-on-human-wildlife-conflict-in-coimbatore




