ஹராரே, வங்காளதேச கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு | டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே வென்றது. இதையடுத்து நடந்த ஒருநாள் தொடரையும் 2-1 என்ற புள்ளி கணக்கில் ஜிம்பாப்வே கைப்பற்றியது. இதனை தொடர்ந்து நடந்த 2 டி20 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற புள்ளிக்கணக்கில் சமநிலையில் உள்ளன. இந்நிலையில், ஜிம்பாப்வே - வங்காளதேசம் இடையேயான 3வது. கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிகந்தர் ராசா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்வே அணியின் பிரைன் பென்னட், டியான் மேயர்ஸ் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். பிரைன் பென்னட்47 ரன்களும், டியான் மேயர்ஸ் 73 ரன்களும் எடுத்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/cricket/3rd-t20-zimbabwe-team-scores-143-runs




