ஜூலை 20-ம் தேதி தொடங்கி, நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நாளையோடு (ஆகஸ்ட் 13) முடிவடைகிறது. 25 நாள்கள் கொண்ட இந்தக் கூட்டத்தொடரில் விடுமுறைகள் போக, 19 நாள்கள் அவை கூடியது. கூடுகிறது. நீட் வினாத்தாள் கசிவிற்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலளிக்க வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டே இந்தக் கூட்டத்தொடரின் முக்கால்வாசி நாள்கள் கடந்துவிட்டது. ஆனால், இவற்றைத் தாண்டியும் நாடாளுமன்றத்தில் மிக எளிதாக பல மசோதாக்களைத் தாக்கல் செய்து, நிறைவேற்றி உள்ளது பாஜக அரசு. மோடி - மத்திய அரசுGold: ஒரே நாளில் ரூ.2,400 உயர்வு! மீண்டும் லைம்லைட்டில் தங்கம்; விலை ஏறுவது ஏன்? எதிர்க்கட்சிகள் அமளி செய்துவிட்டு வெளியே சென்றுவிடுகின்றன. இதனால், எந்த விவாதமுமின்றி எளிதாக மசோதாக்களைத் தாக்கல் செய்துவிடுகிறது மத்திய அரசு. வந்தே மாதரம் திருத்த மசோதா. இந்த மசோதா எந்தவொரு விவாதங்களும் இல்லாமல் மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு, நேற்று குடியரசுத் தலைவர் ஒப்புதலையும் பெற்றுவிட்டது. இப்படி இந்தக் கூட்டத்தொடரில் இதுவரை 19 மசோதாக்கள் எந்த விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதில் ஏழு மசோதாக்கள் வெறும் 36 நிமிடங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தரவுகள் கூறுகின்றன. ஒரு மசோதாவிற்கு 5 நிமிடங்கள் என்று கணக்கு வைத்துக்கொள்வோம். இந்தியா முழுவதும் பின்பற்ற வேண்டிய, நடைமுறையாக மாற வேண்டிய மசோதாக்கள் நிறைவேற்றுவதற்கான நேரம் வெறும் 5 நிமிடங்கள் தானா. அதுவும் எந்த விவாதமும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டிருப்பது சரிதானா என்கிற கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை. அனைத்து மசோதாக்களும் எதிர்க்கட்சிகள் இல்லாமலே நிறைவேற்றப்பட்டன என்று நினைக்க வேண்டாம். சில மசோதாக்களைத் தாக்கல் செய்யும் போது, எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்தன. ஆனால், அதற்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ய, மத்திய அரசுக்கு நிலைமை மிகவும் தோதாக மாறிவிட்டது. ராகுல் காந்தி - எதிர்க்கட்சித் தலைவர்Share Market: பங்குச்சந்தையின் அடுத்த ஹீரோக்கள்! Banking, Finance-ஐ தாண்டி, இந்த 5 துறைகளை கவனியுங்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் ஒவ்வொரு மசோதாவும் நாட்டிற்கு மிக முக்கியமானது. இதை உணர்ந்து விவாதமில்லாமல் மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு காய்களை நகர்த்தக்கூடாது. அமளி செய்வதும். வெளிநடப்பு செய்வதும் மட்டும் எதிர்க்கட்சிகளின் வேலை அல்ல. எவ்வளவு இடையூறுகள் வந்தாலும், ஒவ்வொரு மசோதாவிற்கான வலுவான விவாதங்களை எதிர்க்கட்சி முன்வைத்தே ஆக வேண்டும். இதை உணர்ந்து இரு தரப்புமே செயல்பட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/parliament-session-19-bills-passed-without-debate-data-shows




