சென்னை, மாநில நெடுஞ்சாலை வழிகாட்டிப் பலகைகளில் ஊர்ப்பெயர்களை இந்தியில் எழுதுவதா பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்திள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- வழிகாட்டி பலகை தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் ( எண் 93) அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகையில் திருநெல்வேலி, ஆழ்வார்திருநகரி, தூத்துக்குடி, திருச்செந்தூர் ஆகிய ஊர்களின் பெயர்கள் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளுடன் இந்தியிலும் எழுதப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்தித் திணிப்புக்கு எதிராக போராடிய தமிழகத்தில் மாநில அரசே இந்தியில் பெயர்களை எழுதியிருப்பது கண்டிக்கத்தக்கது. விசாரணை கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இந்தியில் ஊர்ப்பெயர்கள் எழுதப்பட்டதைக் கண்டித்து பல போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், மாநில அரசே இந்தியில் ஊர்ப்பெயர்களை எழுதுவதை ஏற்க முடியாது. இதன் பின்னணி என்ன? யார் காரணம்? என்பது குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வழிகாட்டி பலகைகளில் இந்தி எழுத்துகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-state-government-cannot-accept-writing-place-names-in-hindi-anbumani




