மெக்காய், ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையே கடந்த 13ம் தேதி நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவை முதல் முறையாக அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்காளதேசம் வரலாறு படைத்தது. 2வது டெஸ்ட் இந்நிலையில், ஆஸ்திரேலியா - வங்காளதேசம் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி மெக்காய் நகரில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. வங்காளதேசம் 64 ரன்களுக்கு ஆல் அவுட் இதையடுத்து களமிறங்கிய வங்காளதேச அணி ஆஸ்திரேலியாவின் மிரட்டல் பந்து வீச்சால் முதல் இன்னிங்சில் 64 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பாக பந்து வீசிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆஸ்திரேலியா 210 ரன்களுக்கு ஆல் அவுட் இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. இன்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலியா 210 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பாக ஆடிய அந்த அணியின் கிரீன் அதிகபட்சமாக 67 ரன்கள் சேர்த்தார். வங்காளதேசம் தரப்பில் அந்த அணியின் ஷெரிபுல் இஸ்லாம் அதிகபட்சமாக 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வங்காளதேசம் 95 ரன்களுக்கு ஆல் அவுட் இதன் மூலம் 146 ரன்கள் பின் தங்கிய நிலையில் வங்காளதேசம் இன்று 2வது இன்னிங்சை தொடங்கியது. ஆனால், முதல் இன்னிங்சை போலவே 2வது இன்னிங்சிலும் ஆஸ்திரேலியா அபார பந்து வீச்சை வெளிப்படுத்தியது. இதனால், வங்காளதேசம் 95 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கேப்டன் நிஜமுல் ஹசன் அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா வெற்றி 146 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை ஆடிய வங்காளதேசம் 95 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் வங்காளதேசத்தை இன்னிங்ஸ் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றிபெற்றது. ஸ்டார்க் அபாரம் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் மிச்சேல் ஸ்டார்க் 2வது இன்னிங்சிலும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை ஸ்டார்க் தட்டிச்சென்றார். 1-1 சமன் இந்த வெற்றியின் மூலம் வங்காளதேசத்திற்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற புள்ளி கணக்கில் ஆஸ்திரேலியா சமன் செய்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/cricket/final-test-australia-crushes-bangladesh-by-innings




