முகமது நபி தொடர்பான பேஸ்புக் பதிவு எதிரொலியாக, செளதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை விடுதலை செய்வது தொடர்பில் இலங்கை அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. சிவராசா அனோஜனின் விடுதலைக்கான ராஜதந்திர ரீதியிலான சகல முன்னெடுப்புக்களையும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் குடும்பத்தினர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்து, ஒரு சில மணிநேரத்தின் பின்னர் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஜனாதிபதி நடாத்திய சந்திப்பின் போதே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.bbc.com/tamil/articles/cxr50j4q7zm5o




