புதுடெல்லி, கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் இணையத்தில் கசிந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையம் நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷிய நாட்டின் உதவியுடன் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரு அலகுகள் இங்கு தற்போது செயல்பாட்டில் உள்ள நிலையில், மேலும் நான்கு அலகுகளுக்கான கட்டுமானப் பணிகள் தீவிர மாக நடந்து வருகின்றன. இந்தியாவின் அணுமின் தேவையைப் பூர்த்தி செய்வதில் இந்த மின் நிலையம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ரகசிய ஆவணங்கள் கசிவு? இந்த நிலையில், நேற்று 'வேர்ல்டு லீக்ஸ்' என்ற ஹேக்கர் குழு கூடங்குளம் அணுமின் நிலையத்தின் வரைபடங்கள் மற்றும் உதிரிபாகங்கள் வினியோ கிப்பாளர் விவரங்கள் அடங்கிய ரகசிய ஆவணங்களை இணையதளம் மூலம் பொதுவெளியில் வெளியிட்டுள்ளதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் இந்த தகவலை தேசிய அணுசக்தி ஆணையம் மறுத்து உள்ளது. இருப்பினும் இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான ரகசிய ஆவணங்கள் கசிந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/were-secret-documents-from-the-kudankulam-nuclear-power-plant-leaked




