சென்னை வீட்டில் இருந்தபடியே எளிதில் OP சீட்டு பெறும் வசதியை அமைச்சர் அருண்ராஜ் இன்று தொடங்கி வைத்துள்ளார். தமிழக மருத்துவம், மருத்துவக்கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரான மருத்துவர் கே.ஜி. அருண்ராஜ் வெளியிட்டு உள்ள செய்தியில், அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சை பெறும் வசதிக்காக, ஆன்லைனில் OP (ஓ.பி.) சீட்டு முன்பதிவு செய்யும் 'நலம் AI' என்ற Whatsapp Chatbot தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. வாட்ஸ்அப் எண் இதன்படி, 96192 22999 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு Hi என்று அனுப்பினால் OP சீட்டு பெறும் வகையில் வசதி செய்யப்பட்டு உள்ளது. அதேபோல மருத்துவ பரிந்துரைகள், ஆய்வக அறிக்கைகளையும் இதில் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் கூறியுள்ளார். இதனால், இனி வீட்டிலிருந்தபடியே மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு வசதியாக ஓ.பி. சீட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள முடியும். மருத்துவமனைகளில் இதனை பெறுவதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/இனி-வீட்டில்-இருந்தபடியே-எளிதில்-op-சீட்டு-அமைச்சர்-அருண்ராஜ்-தகவல்-easily-obtain-an-op-slip-from-home-now-minister-arunraj-announces




