சென்னை, சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், சமூக விரோதிகளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கையில் 1577 பேர் கைது. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தடுப்பு காவல் நடவடிக்கை சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில், முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு காவல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவுப்படி மாநிலம் முழுவதும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் குற்றகுணத்தார் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளிகளுக்கு எதிராக தீவிர அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 1577 குற்றவாளிகள் கைது கடந்த 29.07.2026 முதல் 11.08.2026 வரை. சரித்திரப் பதிவேடு ரவுடிகள் மற்றும் குற்றகுணத்தார் மீது மாநிலம் முழுவதும் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நடவடிக்கைகளின் போது 52,279 சரித்திரப் பதிவேடு ரவுடிகள் மற்றும் குற்றகுணத்தார் சோதனை செய்யப்பட்டனர். அவர்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 1577 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர். சிறப்பு நடவடிக்கை பிணையில் வெளிவர முடியாத பிடியாணைகள் நிறைவேற்றும் சிறப்பு நடவடிக்கையில் 29.07.2026 முதல் 11.08.2026 வரை மொத்தம் 3288 பிணையில் வெளிவர முடியாத பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணைகள் நிறைவேற்றுதல் மற்றும் தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்வதற்கான தீவிர முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வழக்கமான சோதனைகள் மாநிலம் முழுவதும் உள்ள மாநகர காவல் ஆணையாளர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் சிறப்பு பிரிவு அதிகாரிகள் ஆகியோருக்கு. சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், குற்றகுணத்தார், தொடர்குற்றவாளிகள், மற்றும் சமூக விரோதிகள் மீது தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளவும். வழக்கமான சோதனைகள். கண்காணிப்பு பணி தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தீவிரமான கண்காணிப்புகள் மூலம் குற்ற செயல்களை தடுக்கவும். சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் கண்காணிப்பு பணிக்கான அமலாக்க ஒருங்கிணைப்பை மேம்படுத்தியுள்ளதுடன். தடுப்பு காவல் நடவடிக்கைகளை வலுப்படுத்தி, பிடியாணைகள் நிறைவேற்றுதலை அதிகரித்து. அமலாக்க நடவடிக்கை தொடர் குற்றவாளிகள் மற்றும் சட்டம்-ஒழுங்கிற்கு அச்சுறுத்தலாக உள்ளவர்களுக்கு எதிராக இலக்கு வைத்து நடவடிக்கை எடுக்க உதவியுள்ளன. இதன் மூலம் மாநிலம் முழுவதும் பொது ஒழுங்கை உயர்தரத்தில் பராமரிப்பதற்கும். பொதுமக்கள். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நடவடிக்கைகள் மேலும் வலுப்பெற்றுள்ளன. சட்ட அமலாக்க நடவடிக்கைகள் மேலும் வலுப்பெற்றுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/special-drive-against-history-sheeters-anti-socials-1577-arrested




