நடிகர் விஷால் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என்று பல வேலைகளில் பிஸியாக இருந்தாலும் பல வருஷங்களாக மாணவர்களின் கல்விக்கும் உதவி செய்து வருகிறார். குறிப்பாக பொருளாதார சுழல் காரணமாக உயர்கல்வியை தொடர முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு தனது ‘தேவி அறக்கட்டளை’ மூலம் உதவிகளை செய்து வருகிறார். கடலூர் விழமங்கலத்தை சேர்ந்தவர் தீபிகா. அம்மா, அப்பா இருவரும் விவசாயிகள். பிளஸ் 2-வில் 600-க்கு 551 மார்க் பெற்றாலும், அவரை குடும்பத்தால் படிக்க வைக்க முடியாத நிதிச் சூழல். இதனால், தீபிகா தேவி அறக்கட்டளையை அணுகியிருக்கிறார். அறக்கட்டளையில் நேர்காணலில் பாஸ் ஆன மாணவிக்கு தனியார் கல்லூரி ஒன்றில் பிசிஏ படிப்பிற்கு சீட் கிடைத்திருக்கிறது. தற்போது படிப்பை நிறைவு செய்து தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளார். நடிகர் விஷாலின் ‘தேவி அறக்கட்டளை’ மூலம் நிதியுதவி பெற்று படித்த 10 மாணவிகள் தங்களது இளங்கலைப் பட்டங்களைப் பெற்றனர் இதுகுறித்து நெகிழ்ச்சியடைந்த விஷால், “இந்த ஆண்டின் மிக மகிழ்ச்சியான தருணங்களில் இதுவும் ஒன்று. என்னுடைய ‘தேவி அறக்கட்டளை’ மூலம் படிச்ச தீபிகா என்கிற கல்லூரி மாணவி இன்னைக்கு தனியார் கல்லூரி ஒன்றில் கல்வியில் கோல்டு மெடல் வாங்கியிருக்காங்க. எனக்கு நான் நடிச்ச படங்களுக்கு கிடைக்குற விருதுகளை விட, இது தான் பெருமை. தீபிகா, உன்னுடைய அசாதாரண சாதனைக்கு வாழ்த்துகள். எங்களை அளவிட முடியாத அளவிற்கு பெருமைப்பட வைத்துள்ளாய். உன்னை மாதிரி வாழ்க்கையில் சாதிக்கணும் படிக்கணும்னு என்று நினைக்கிற பல மாணவர்களுக்கு நீ முன்மாதிரி” என வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/the-happiest-moment-of-my-life-actor-vishal-praises-gold-medal-winning-student




