வாஷிங்டன், 4வது மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் கடந்த மாதம் 18ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 6 அணிகள் பங்கேற்ற இத்தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, இத்தொடருக்கான பிளே ஆப் சுற்று போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. இதில் நேற்று நடந்த குவாலிபையர் 1 சுற்று ஆட்டத்தில் சான் பிரான்சிஸ்கோ யூனிகான்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. 187 ரன்கள் குவிப்பு இதில் டாஸ் வென்ற சான் பிரான்சிஸ்கோ முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த லாஸ் ஏஞ்சல்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 187 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் ரசல் அதிகபட்சமாக 62 ரன்கள் சேர்த்தார். லாஸ் ஏஞ்சல்ஸ் வெற்றி இதையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சான் பிரான்சிஸ்கோ 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சான் பிரான்சிஸ்கோவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லாஸ் ஏஞ்சல்ஸ் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் முன்னேறியது. இப்போட்டியில் தோல்வியடைந்த சான் பிரான்சிஸ்கோ குவாலிபையர் 2 சுற்றுக்குள் நுழைந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/cricket/major-league-cricket-los-angeles-knight-riders-beats-san-francisco-unicorns-in-qualifier




