சென்னை, தமிழகத்தையே உலுக்கி வரும் ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில், தற்போது புதிய மற்றும் அதிர்ச்சிகரமான திருப்பம் ஏற்பட்டுள்ளது. வீரமணியின் நீண்டகால பெண் உதவியாளராக இருந்த சாந்தி, தனது உயிருக்கு வீரமணி மற்றும் அவரது மகளால் ஆபத்து இருப்பதாகக் கூறி ரகசியமாக வெளியிட்டுள்ள வீடியோ வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் வன்கொடுமை சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் 10-க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி, அவரது பெண் உதவியாளர் சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்மன் ஆகியோர் ஏற்கனவே மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வீடியோ காட்சிகள் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாந்தி மற்றும் வீரமணியின் மற்றொரு உதவியாளரான கணேசன் ஆகியோரின் செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து தீவிர சைபர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், சிறுமிகளுடன் வீரமணி இருக்கும் பல்வேறு வீடியோ காட்சிகள் மற்றும் பென் டிரைவ்கள் சிக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சிறுமிகளை ஆபாச வீடியோ எடுத்து, அதன் மூலம் வீரமணியிடம் கோடிக்கணக்கில் பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கோடிகளில் கைமாறிய லஞ்சம்? இதற்கிடையே, இந்த வழக்கில் தொடர்புடைய பிரகாஷ் என்பவர் வெளிநாட்டிற்கு தப்பி ஓடியுள்ள நிலையில், காவல்துறை சம்மன் அனுப்பி அவரை தீவிரமாக தேடி வருகிறது. மேலும், கடந்த காலங்களில் இந்த வழக்கை மூடி மறைக்க சென்னை காவல்துறையின் சில உயர் அதிகாரிகளுக்கு ரூ.70 கோடி வரை லஞ்சம் கைமாறியதாக கூறப்படும் புகார் குறித்தும், தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளையும் கைது செய்ய போலீஸ் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது. தமிழகத்தையே உலுக்கி வரும் ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் ஆர். வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில், அவரது பெண் உதவியாளர் சாந்தி கைது செய்யப்படுவதற்கு முன்பாக பதிவு செய்த அதிர்ச்சியூட்டும் வீடியோ வாக்குமூலம் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் சாந்தி உருக்கமாக பேசியிருப்பதாவது:- காட்பாதர் ஜெம் குரூப் ஆப் கம்பெனிஸ் தலைவர் வி. வீரமணி மற்றும் அவரது மகன் சித்தார்த் வீரமணி ஆகியோரால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. வீரமணியை எனது சிறுவயதிலிருந்தே குடும்ப நண்பராக தெரியும். நான் 13 வயது சிறுமியாக இருந்தபோது, எனது அறியாமையைப் பயன்படுத்தி அவர் என்னை பாலியல் ரீதியாக சீரழித்தார். தனது கொடிய எண்ணங்களை மறைத்து, எனக்கு ஒரு 'காட்பாதர்' போல என்னை நம்ப வைத்தார். உயிருக்கு அச்சுறுத்தல் அவர் சொன்னதை எல்லாம் நான் செய்தேன். அவரது நிதி நெருக்கடியான காலங்களில் எனக்கு தெரிந்த வழிகளில் நிதியை திரட்டி கொடுத்தேன். அவர் எனக்கு நன்மைகள் செய்வார் என்ற நம்பிக்கையில், எனது தந்தையின் சொத்து மூலம் எனக்கு கிடைத்த முழு பணத்தையும் கூட அவரிடமே ஒப்படைத்தேன். ஆனால், தற்போது அவராலும் அவரது மகனாலும் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு சாந்தி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். அதிகரிக்கும் வழக்கின் தீவிரம் ஏற்கனவே சிறுமிகள் பாலியல் வழக்கில் சிக்கியுள்ள வீரமணி மீது, இப்போது அவரது நீண்டகால உதவியாளரே பாலியல் மற்றும் மோசடிப் புகார்களை சுமத்தியிருப்பது இந்த வழக்கின் தீவிரத்தை மேலும் அதிகரித்துள்ளது. சாந்தியின் இந்த வீடியோ வாக்குமூலம் மற்றும் வழக்கை மறைக்க கைமாறியதாக கூறப்படும் ரூ.70 கோடி பணப் பரிமாற்றம் குறித்த புகார்கள் தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/my-life-in-danger-due-to-veera-mani-accused-in-sexual-case-shanthi-assistant-shocking-testimony



