சென்னை, புறம்போக்கு நிலங்களில் கட்டப்பட்டிருக்கக் கூடிய வீடுகளுக்கு அரசு அதிகாரியிடம் இருந்து தடையில்லா சான்று பெறாமலேயே மின் இணைப்பு வழங்குவது தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து ஏராளமான கோரிக்கைகள் வந்தன. இது குறித்து எரிசக்தித்துறை அமைச்சர் நிர்மல் குமார் கடந்த ஜூலை மாதம் ஆய்வு செய்தார். இந்த நிலையில், புறம்போக்கு நிலங்களில் கட்டப்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு பெறுவதற்கு என்.ஓ.சி.(NOC) எனப்படும் தடையில்லா சான்று தேவையில்லை என உத்தரவு பிறப்பித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, புறம்போக்கு நிலங்களில் 250 சதுர அடிக்குள் கட்டப்பட்ட வீடுகளுக்கு மட்டும் தடையில்லா சான்று இல்லாமல் வீட்டு உபயோக மின் இணைப்பு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம், நீர்நிலை புறம்போக்கு, மேய்ச்சல் மந்தைவெளி புறம்போக்கு நிலங்களில் வீடுகள் கட்டப்பட்டிருந்தால் அதற்கு இந்த உத்தரவு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி, வனத்துறைக்கு சொந்தமான நிலங்கள், வன புறம்போக்கு நிலங்கள், மத்திய அரசுக்கு சொந்தமான ராணுவ கட்டுப்பாட்டு பகுதிகள், ரெயில்வே நிலங்கள், மத நிறுவனங்களின் பெயரில் இருக்கக் கூடிய பட்டா நிலங்கள், கோவில் புறம்போக்கு நிலங்கள் ஆகியற்றிற்கும் இந்த உத்தரவு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/houses-built-on-poramboke-government-owned-land-electricity-connections-granted-without-a-no-objection-certificate-tamil-nadu-government-order




