தாராபுரம், திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் தலைமையிலான பறக்கும் படையினர், தாராபுரம் பழைய திருப்பூர் ரோடு சங்கரண்டாம்பாளையம் பிரிவு அருகே வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டனர். பறக்கும் படை அப்போது அந்த வழியாக திருப்பூர் நோக்கி கார் ஒன்று வந்தது. அந்த காரை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அந்த காரில் ரூ.5 1/5 லட்சம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காரை ஓட்டி வந்தவரிடம் பறக்கும் படையினர் விசாரித்தனர். விசாரணையில் காரில் வந்தவர். திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த சிவில் என்ஜினீயர் பாலசுப்பிரமணியன் என்றும், பழனியில் இருந்து திருப்பூர் செல்வதாகவும் தெரிவித்தார். பறிமுதல் அவரிடம், அந்த பணத்துக்கான ஆவணங்களை பறக்கும்படையினர் கேட்டனர். ஆனால் அவரிடம் எந்த ஆவணமும் இல்லை. இதையடுத்து பணத்தை போலீசார் பறிமுதல் செய்து, தாராபுரம் தாசில்தார் ராமலிங்கத்திடம் ஒப்படைத்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/55-lakh-in-cash-was-seized-from-a-car-near-dharapuram-as-it-was-being-transported-without-valid-documentation




