தொகுதி மறுவரையறைக்காக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கூட்டு வதற்கு முன்பு, அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுங்கள் என பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:- சிறப்பு கூட்டத்தொடர் தொகுதி மறுவரையறை தொடர்பான அரசின் முன்மொழிவுகள் குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டுமாறு நான் கடந்த ஜூலை மாதம் 16-ந்தேதி உங்களுக்குக் கடிதம் எழுதியிருந்தேன். நீங் கள் பரிசீலிக்கும் நாடாளுமன்றத்தின் ஏதேனும் ஒரு சிறப்புக் கூட்டத்தொடரில் அத்தகைய முன்மொழிவுகளை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு. அனைத்து அரசியல் கட்சிகளும் அவற்றை விரிவாகப் படித்துப் பார்க்கப் போதுமான கால அவகாசம் வழங்குமாறும் கோரியிருந்தேன். அத்தகைய ஒரு சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்படலாம் என்று நாடாளு மன்ற விவகாரங்கள் துறை மந்திரி டி.வி. பேட்டியில் பகிரங்கமாக கூறி யுள்ளதால், இந்தக் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தவே நான் இப்போது கடிதம் எழுதுகிறேன். 543 இடங்கள் மக்களவையின் தற்போதைய பலமான 543-ஐ மேலும் 25 ஆண்டுகளுக் குத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். 2029 மக்களவைத் தேர்தல் முதல் பெண்களுக்கு 3-ல் ஒரு பங்கு இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதில் காங்கிரஸ் மிகவும் தெளிவாக உள்ளது.நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி சுட்டிக்காட்டியபடி நீங்கள் அந்த நடவடிக்கையில் மேற்கொண்டு செல்வதற்கு முன், நான் உங்களி டம் முன்பு விடுத்த வேண்டுகோளை மீண்டும் வலியுறுத்த விரும்புகி றேன். உங்கள் மனதில் உள்ள தொகுதி மறுவரையறை முன்மொழிவுகள் குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டுங்கள். வலுக்கட்டாயமாக திணிக்காதீர்கள் அதற்கான முன்மொழிவுகளைப் படித்துப்பார்க்க அனைத்து அரசியல் கட் சிகளுக்கும், மாநில அரசுகளுக்கும் போதுமான கால அவகாசம் அளிக்க வேண்டும். இது நாட்டுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சி னையாகும். தயவுசெய்து, கடந்த ஏப்ரல் மாதம் 16 மற்றும் 17-ந்தேதி களில் நீங்கள் முயன்றது போல் மீண்டும் வலுக்கட்டாயமாகத் திணிக்க முயற்சிக்காதீர்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/convene-an-all-party-meeting-mallikarjun-kharge-writes-to-pm-modi




