ஐதராபாத், ஐதராபாத்தில் பள்ளிக்கூட படிக்கட்டில் தவறி விழுந்து மாணவி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பள்ளிக்கூட படிக்கட்டில் தவறி விழுந்த மாணவி ஐதராபாத் நகரின் ரங்கா ரெட்டி மாவட்டம் ஷாத்நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்த மாணவி வர்ணிகா (வயது 9). பள்ளியில் உள்ள மாடியில் இருந்து படிக்கட்டுகள் வழியாக இறங்கும் போது நிலைதடுமாறி கீழே விழுந்தார். சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு இதில் பலத்த காயமடைந்த சிறுமியை பள்ளி ஊழியர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த வர்ணிகா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/student-dies-after-falling-down-school-stairs




