புதுடெல்லி, அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்திய குடிமக்கள் திருப்பி அனுப்பப்படுவது குறித்து நாடாளுமன்ற மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று பதிலளித்தார். அதன்படி, “2026 ஜனவரி 1-ந்தேதி முதல் மார்ச் 31-ந்தேதி வரையிலான 3 மாத காலத்தில், அமெரிக்காவில் இருந்து 414 இந்தியர்கள் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அதே காலகட்டத்தில் மற்ற நாடுகளில் இருந்து 170-க்கும் மேற்பட்டோர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதே காலகட்டத்தில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து 174 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக இங்கிலாந்து 57 இந்தியர்களையும், சைப்ரஸ் நாடு 53 இந்தியர்களையும் திருப்பி அனுப்பியுள்ளது. இதே போல், 2026 ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் இந்தியர்களைத் திருப்பி அனுப்பிய பிற ஐரோப்பிய நாடுகளின் பட்டியலில் கிரீஸ் (10), துருக்கி (8), பிரான்ஸ் (6), இத்தாலி (5), ஜெர்மனி (4), ஸ்வீடன் (4), நெதர்லாந்து (4), பெல்ஜியம் (3), போர்ச்சுகல் (3), ருமேனியா (3), செர்பியா (3), டென்மார்க் (2), ஆஸ்திரியா (1), போலந்து (1) மற்றும் லாட்வியா (3) ஆகிய நாடுகள் உள்ளன. மொத்தத்தில், 2026 ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாத காலத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து 588 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார். அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்படும் இந்தியர்களின் எண்ணிக்கை சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்துள்ளது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/the-us-deported-414-indians-during-the-first-three-months-of-2026-central-government




