ராஞ்சி, அக்கா கணவர் மீது ஏற்பட்ட மோகத்தால் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த வருங்கால கணவரை கொன்ற இளம்பெண் கைது செய்யப்பட்டார். திருமணம் நிச்சயம் ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தின் ஜமுவா சோக் பகுதியைச்சேர்ந்தவர் நீரஜ்(20). இவருக்கும்,அதே பகுதியை சேர்ந்த ஊர்மிளா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,ஊர்மிளாவுக்கும் அவரது சகோதரியின் கணவரான சுபாஷ் பஸ்வானுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. அக்கா கணவருடன் கள்ளக்காதல் எனவே தனக்கு திருமணம் நடந்து விட்டால் தனது அக்கா கணவருடன் உல்லாசமாக இருக்க முடியாது என்று ஊர்மிளா நினைத்துள்ளார். இதனால், கள்ளக்காதலர்கள் இருவரும் சேர்ந்து நீரஜை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி ஊர்மிளா தனது வருங்கால கணவர் நீரஜை பீகார் எல்லையோரத்தில் உள்ள பேலா வனப்பகுதிக்கு உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி நீ மட்டும் தனியாக வரும்படி அழைத்துள்ளார். வனப்பகுதிக்கு அழைப்பு இதை நம்பிய நீரஜ்,குறிப்பிட்ட வனப்பகுதிக்கு ஆசையுடன்சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே இவருக்காக காத்திருந்த ஊர்மிளாவும் சுபாஷ்பஸ்வானும் இணைந்து, நீரஜை கத்தியால் கொடூரமாக குத்தினர். இதில் நீரஜ் அதே இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர்,இருவரும் நீரஜின் உடலை வனப்பகுதியில் விட்டுச்சென்றுள்ளனர். இதற்கிடையே நீரஜ் காணாமல் போனதை அறிந்து அவரதுகுடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், நீரஜை தேடும் பணியைதீவிரப்படுத்தினர். அவரின் மொபைல் போன் சிக்னல் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களை ஆய்வு செய்த போது, நீரஜின் கடைசி இருப்பிடம் பேலா வனப்பகுதி என்பது தெரியவந்தது. மேலும், சம்பவம் நடந்த இடத்தில் ஊர்மிளாவின் மொபைல் போனும் இருந்நது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் ஊர்மிளாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஊர்மிளா நடந்த அனைத்தையும் ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து, போலீசார் கள்ளக்காதலர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/neeraj-hazra-a-20-year-old-resident-of-jamua-chowk-in-jharkhands-giridih-district




