கோழிக்கோடு, கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர், அமீபா மூளைக்காய்ச்சல் பாதிப்பால் மரணம் அடைந்தார். ஆட்டோ டிரைவருக்கு அமீபா மூளைக்காய்ச்சல் கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், கொயிலாண்டி பகுதியை சேர்ந்தவர் 49 வயது நபர். ஆட்டோ டிரைவரான இவர் கடந்த 23-ந்தேதி உடல் வலி, காய்ச்சல், வாந்தி போன்ற அறிகுறிகளுடன் கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆட்டோ டிரைவர் மரணம் இருப்பினும், அவரது உடல்நிலை மோசமானது. மருத்துவ பரிசோதனையில் அவர் அமீபா மூளைக்காய்ச்சல் என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஆட்டோ டிரைவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார். மீண்டும் பரவல் சுகாதாரம் இல்லாத நீர்நிலைகளில் குளிப்பதால் இந்த நோய் பரவுகிறது. கேரளத்தில் கடந்த ஆண்டு அமீபா மூளைக்காய்ச்சல் நோய் பரவி வந்தது. தற்போது மீண்டும் இந்த நோய் பரவி வருவது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/kerala-auto-driver-dies-of-amoebic-encephalitis




