கேரள மாநிலத்தில் மீட்புப் பணிக்காகச் சென்ற ஜீப் ஒன்றில் பல இடங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. அந்த வாகன ஓட்டுநருக்கு ரூ.5,000 அபராதம் வசூலிக்கப்பட்டிருந்தது. அதற்கு கேரள உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்தது. விதியை மீறி பொருத்தப்படும் அதிக பிரகாசமுள்ள விளக்குகளுக்கும் கட்டாயம் தனித்தனியாக அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வாகனங்களில் விதிகளுக்குப் புறம்பாகச் செய்யப்படும் ஒவ்வொரு உருமாற்றத்திற்கும் தனித்தனியாக தலா ரூ.5,000 வீதம் அபராதம் விதிக்க வேண்டும். வாகனங்களின் வெளிப்புறத்திலோ, ஓட்டுநர் கேபினிலோ அல்லது பயணிகள் அமரும் பகுதியிலோ எவ்வித சட்டவிரோத விளக்குகளோ, அலங்காரங்களோ இடம்பெறக் கூடாது என்றும் நீதிபதிகள் அனில் கே. நரேந்திரன், எஸ். முரளி கிருஷ்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மோட்டார் வாகனத் துறையின் அமலாக்கப் பிரிவுக்கும், காவல்துறையினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரள உயர் நீதிமன்றம் சாலைப் பாதுகாப்பு, ஒலி மற்றும் காற்று மாசு கட்டுப்பாட்டு விதிகள் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவுகளையும் மத்திய மோட்டார் வாகன விதிகளையும் மீறுவது பாதசாரிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. 'கேரளா அல்லா. இனி 'கேரளம்' ஆனு' - கேரளம் - பெயர் மாற்றத்திற்குக் காரணம் என்ன? இவ்வாறாக உருமாற்றம் செய்யப்பட்ட வாகனங்களைச் சில யூடியூப் விளாக்கர்கள் விளம்பரப்படுத்துவது மிகவும் ஆபத்தான செயல் எனக் குறிப்பிட்ட நீதிமன்றம், அத்தகைய வீடியோக்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. நீதிமன்றம் தானாக முன்வந்து தொடரப்பட்ட இந்த வழக்கு மீதான விசாரணையை நீதிமன்றம் செப்டம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. கார் இருசக்கர வாகனங்கள் உள்பட பிற வாகனங்களில் பொருத்தப்படும் அதிக பிரகாசமுள்ள முகப்பு விளக்குகள், எதிரே வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளின் பார்வையைச் சில நொடிகள் முற்றிலுமாக மங்கச் செய்கின்றன. இதனால் நிலைதடுமாறும் பாதசாரிகள் கழிவுநீர்க் கால்வாயிலோ, குழிகளிலோ விழவோ அல்லது வாகனங்களில் மோதி விபத்தில் சிக்கவோ வாய்ப்புள்ளது. இத்தகைய கண்கூசும் வெளிச்சத்தால் ஓட்டுநர்களின் துரித முடிவெடுக்கும் திறன் குறைகிறது. எதிரே வரும் வாகனத்தின் தூரத்தைத் துல்லியமாகக் கணிக்க முடியாமல் போய், குறுகிய சாலைகளிலும் நெடுஞ்சாலைகளிலும் கோர விபத்துகள் நிகழ்கின்றன. வாகனத்தின் பாடிக்கு வெளியே துருத்திக்கொண்டு இருக்கும்படி சக்கரங்களைப் பொருத்தக் கூடாது. இத்தகைய சக்கரங்கள் சுழலும்போது வெளியே தெறிக்கும் சேறும் சகதியும், அருகில் மற்றும் பின்னால் வரும் சைக்கிள், பைக் ஓட்டிகளுக்குப் பெரும் இடையூறாக அமைகின்றன. வாகனங்களில் உருமாற்றங்கள் செய்வது விபத்துக்கு வழிவகுக்கும் என்பதால் ஐகோர்ட்டின் இந்த உத்தரவுக்கு வாகன ஓட்டிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மீண்டும் புதைகுழியாகும் வயநாடு. பேரழிவிலிருந்தும் பாடம் கற்காத கேரளம்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/separate-fine-for-every-modification-made-to-a-vehicle-what-does-kerala-high-court-say




