சென்னை, பரமக்குடி அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த பெண் தலைமைக் காவலரின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூர் காவல் நிலையத்தில் பெண் தலைமைக் காவலராகப் பணிபுரிந்துவந்த எம்.கண்ணகி (34 வயது) என்பவர் நேற்று (28.09.2026) பரமக்குடி அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் பணியில் இருக்கும்போது, இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறின்பொழுது அவர்களுக்கு உண்டான காயத்திற்கு சிகிச்சைக்காக மீண்டும் அம்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதனைத் தடுக்கும் முயற்சியில் தப்பி ஓடிய நபரைப் பிடிக்க துரத்திச் சென்றபோது எதிர்பாராதவிதமாகத் தவறிவிழுந்து மயங்கிய நிலையில், சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன். தலைமைக் காவலர் எம்.கண்ணகியின் உயிரிழப்பு, தமிழ்நாடு காவல்துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். கண்ணகியை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு முப்பது லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/female-police-officer-dies-on-duty-family-gets-rs-30-lakh-aid-cm-announces




