கோத்தகிரி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அப்பகுதியில் உள்ள உயிலட்டி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். வறண்ட நீர்வீழ்ச்சி கோத்தகிரியில் இருந்து கூக்கல்தொரை செல்லும் சாலையில் உயிலட்டி கிராமப்பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் நீர்வீழ்ச்சி ஒன்று அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சி நீரை நம்பி, இப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் மலைக்காய்கறிகள் மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த காய்கறிகளை பயிரிட்டுள்ளனர். நீர்வரத்து வெகுவாக குறைந்து இந்த நிலையில், கோத்தகிரி பகுதியில் கடந்த சில மாதங்களாக பருவமழை பொய்த்ததால் நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு காணப்பட்டன. இதனால் உயிலட்டி நீர்வீழ்ச்சிக்கும் நீர்வரத்து வெகுவாக குறைந்து, பாறைகளாக காட்சியளித்தது. விவசாயிகள் இதனால் கவலையடைந்த விவசாயிகள் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால், தங்களது விளைநிலங்களில் புதிய கிணறுகள் அமைத்தும், லாரிகள் மூலம் பணம் கொடுத்து தண்ணீரை விலைக்கு வாங்கியும் பயிர்களுக்கு பாய்ச்சி வந்தனர். வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது இந்நிலையில், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் மிதமான மழை பெய்தது. அதேபோல, கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமார் 1½ மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது. நீர்வரத்து உயர்வு இந்த தொடர் மழையின் காரணமாக, நீர்வீழ்ச்சிக்கு வரும் நீர்வரத்து உயர்ந்து, தற்போது வெள்ளம் பெருக்கெடுத்து ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. வறண்டு கிடந்த நீர்வீழ்ச்சியில் தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவது காண்போரின் கண்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை வார இறுதி விடுமுறை நாட்களைக் கழிக்க கோத்தகிரி பகுதிக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் தொலைவில் நின்றபடி நீர்வீழ்ச்சியின் அழகை கண்டு களித்து, ஆர்வத்துடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து செல்கின்றனர். இருப்பினும், இந்த நீர்வீழ்ச்சி பகுதியில் போதிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாததாலும், பாறைகளில் வழுக்கல் ஏற்படும் அபாயம் இருப்பதாலும், சுற்றுலா பயணிகள் யாரும் நீர்வீழ்ச்சிக்கு அருகே சென்று குளிக்கவோ, இறங்கவோ முயற்சிக்கக் கூடாது என வனத்துறையினர் பலத்த எச்சரிக்கை விடுத்து, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/heavy-rains-in-kotagiri-floods-swell-uyilatti-waterfalls-forest-department-bans-tourist-bathing




