ஐதராபாத், தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன், சற்று மனநிலை சரியில்லாதவர். இவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து அவரை ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா ஆஸ்பத்திரியில் பெற்றோர் அனுமதித்தனர். அவரது வயிற்றை 'எக்ஸ்ரே' எடுத்து டாக்டர்கள் பார்த்தனர். அப்போது வயிற்றில் 3 'பிளேடு' துண்டுகள் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் 'என் டோஸ்கோபி' மூலமாக வயிற்றில் இருந்த பிளேடு துண்டுகளை டாக்டர்கள் வெற்றிகரமாக அகற்றினர். சிறுவனும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மனநிலை சரியில்லாத சிறுவன், பிளேடுகளை விழுங்கியதாக கூறப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/telangana-three-razor-blade-fragments-removed-from-a-boys-stomach




