நான்கு பக்கமும் நீர் சூழ்ந்திருக்கும் பகுதி தீவு எனப்படுகிறது. பெரும்பாலும் கடல்தான் தீவுகள் உருவாகுவதற்கு முதன்மை கார ணமாக இருக்கிறது. பூமியின் பெரும்பரப்பை ஆக்கிரமித்துள்ள கடல் பல தீவுக்கூட்டங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. எரிமலை வெடிப்பு நிகழ்வது, புவித்தட்டுக்கள் நகர்வது, பவளப்பாறைகள் பெருகுவது உள்ளிட்ட காரணங்களால் தீவுகள் உருவாகுகின்றன. இந்தத் தீவுகள் பல்லுயிர் பெருக்கம், காலநிலை ஒழுங்குமுறை மற்றும் மக்கள் குடியேற்றம் உள்ளிட்ட வாழ்வியல் நடைமுறைகளுக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. எந்த கடலில் அதிக தீவுகள் உள்ளன? உலகளவில் அதிக எண்ணிக்கையிலான தீவுகள் பசிபிக் பெருங்கடலில்தான் அமைந்துள்ளன. மற்ற கடல்களை விட மிக அதிகமாகவும், பரந்து விரிந்தும் ஆயிரக்கணக்கான தீவுகளை கொண்டுள்ளது. இதன் பிரம்மாண்டமான அளவும், புவியியல் செயல்பாடுகளும் மிக வளமான பெருங்கடலாக பசிபிக் கடலை அடையாளப்படுத்துகின்றன. சுமார் 25 ஆயிரம் தீவுகள் பசிபிக் பெருங்கடலில் அமைந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. பூமியின் மிகப்பெரிய பெருங்கடல் பசிபிக் பெருங்கடல்தான் பூமியின் மிகப்பெரிய பெருங்கடலாகும். அதாவது பூமியின் மேற்பரப்பில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகு தியை ஆக்கிரமித்துள்ளது. வடக்கில் ஆர்க்டிக் பெருங்கடல் முதல் தெற்கில் தென் பெருங்கடல் வரை பரவியுள்ளது. அப்படி பரந்து விரிந்த பரப்பளவே எண்ணற்ற தீவுகள் உருவாகவும் காரணமாகிவிட்டது. கடல்சார் பல்லுயிர் பெருக்கம் மற்ற கடல்களை விட பசிபிக் பெருங்கடல்தான் அதிகபட்ச கடல்சார் பல்லுயிர் பெருக்கத்தையும் கொண்டுள்ளது. ஆயிரக்கணக்கான கடல்வாழ் உயிரினங்களை தாங்கி நிற்கும் பவளப்பாறை அமைப்புகள், ஆழ்கடல் சூழல் அமைப்புகள் மற்றும் கடலோர வாழ்விடங்க ளுக்கு அடித்தளமாகவும் அமைந்திருக்கிறது. பசிபிக் தீவுகள் எவ்வாறு உருவானது? பெரும்பாலான பசிபிக் தீவுகள், நீருக்கடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளில் இருந்து உருவானவை. அவை படிப்படியாக கடல் மட்டத்திற்கு மேலே உயர்ந்தன. காலப்போக்கில். இந்த எரிமலை தீவுகளை சுற்றி பவளப்பாறைகள் உருவாகி, பவள தீவுகளாக உருமாற்றிவிட்டன. புவித்தட்டு உயர்வும் கடல் தளத்தின் சில பகுதிகளை நிலப்பரப்புகளாக மாற்றி தீவாக உருவாக்குவதில் முக்கிய பங்களிப்பை கொண்டிருக்கின்றன. அதிக எரிமலைகள் செயல்பாட்டில் இருக்கும் எரிமலைகளுள் உலகில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்டவை பசிபிக் பெருங்கடலை சூழ்ந்தே அமைந் துள்ளன. அவை தீவுகளை தொடர்ந்து மறு வடிவமைப்பு செய்து வருகின்றன. பிஜி, கிரிபாட்டி, டோங்கா போன்ற பல தீவு நாடுகள் உணவு, போக்குவரத்து மற்றும் பொருளாதார நிதி ஆதாரங்களுக்காக பசிபிக் பெருங்கடலை பெரிதும் சார்ந்துள்ளன. பசிபிக் பெருங்கடலில் உள்ள கடல் நீரோட்டங்கள், பருவமழை மற்றும் கடல்-வளிமண்டல நிகழ்வுகள் உட்பட உலகளாவிய வானிலையை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எரிமலை வெடிப்பு மற்றும் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படும் சூழலை கொண்ட 'நெருப்பு வளையத்தில்' பசிபிக் பெருங்கடல் அமைந்துள்ளது. தொடர்ந்து எரிமலை வெடிப்புகள் நிகழும்போது அந்த இடத்தில் புதிய தீவுகள் உருவாகின்றன. அதே நேரத் தில் புவித்தட்டு நகரும்போது ஏற்கனவே உள்ள நில வடிவங்களை உயர்த்தி நிலப்ப ரப்பை உள்ளடக்கிய தீவாக மாற்றுகின்றன. நீரில் மூழ்கிய எரிமலைகளின் செயல்பாடு கள் பவளத்தீவுகள் உருவாகுவதற்கு பங்களிப்பு செய்கின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/do-you-know-which-ocean-has-the-most-islands




