துபாய், பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்டில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் இலங்கை, வங்காளதேசம் அணிகள் மோதி வருகின்றன. பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்று வருகிறது. இத்தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கியது. இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, ஹாங்காங் மற்றும் குரூப் பி பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா என மொத்தம் 8 அணிகள் இடம்பெற்றுள்ளன இலங்கை - வங்காளதேசம் இந்நிலையில், பெண்கள் ஆசிய கோப்பை டி20 தொடரில் இன்று நடைபெற்று வரும் 10வது லீக் ஆட்டத்தில் இலங்கை, வங்காளதேசம் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. வங்காளதேசம் 114 ரன்கள் இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் ஷ்ஹானா மொஸ்டிரி அதிகபட்சமாக 34 ரன்கள் சேர்த்தார். அதேவேளை, சிறப்பாக பந்து வீசிய இலங்கை வீராங்கனை சமுதி பிரபோதா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இலங்கை களமிறங்கி விளையாட உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/cricket/womens-asia-cup-bangladesh-set-115-target-for-sri-lanka




