வேலூர் அருகேயுள்ள சதுப்பேரியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 42), பெயிண்டர். இவர், நேற்று முன்தினம் சிறுகாஞ்சியிலுள்ள விவசாய நிலப்பகுதியில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்த வழக்குத் தொடர்பாக, அரியூர் போலீஸார் தீவிர விசாரணை நடத்தியதில், சிறுகாஞ்சியைச் சேர்ந்த ராகுல் (26) என்ற இளைஞன் சிக்கினார். வினோத்குமாரைக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டு, ராகுல் வாக்குமூலம் அளித்திருக்கிறார். கொலை அதாவது, திருமணமாகி மனைவி மற்றும் குழந்தையைப் பிரிந்து வாழ்ந்துவந்த வினோத்குமாருக்கு சிறுகாஞ்சியைச் சேர்ந்த வேறொருவரின் மனைவியுடன் திருமணம் மீறிய உறவு ஏற்பட்டிருக்கிறது. அந்தப் பெண், ராகுலுடனும் தொடர்பில் இருந்திருக்கிறார். இதைத் தெரிந்துகொண்ட வினோத்குமார், அந்தப் பெண்ணிடம் சென்று, `ராகுலுடன் பழகக் கூடாது. நீ எனக்கு மட்டும்தான்’ என்று கண்டித்திருக்கிறார். அதற்கு அந்த பெண், `தேவையில்லாத விஷயத்துல தலையிடாம உன் வேலையை மட்டும் பார். இனிமே, என் வீட்டுப் பக்கம் வராதே’ என்று வினோத்குமாரிடம் கண்டிப்புடன் பேசியதாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்றும், அந்தப் பெண்ணின் வீட்டில் வினோத்குமார் சண்டைப் போட்டுக் கொண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. அப்போது அங்கு சென்ற ராகுல், வினோத்குமாரிடம் மோதலில் ஈடுபட்டிருக்கிறார். அப்பகுதி மக்கள், இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்திருக்கின்றனர். இதையடுத்து, அன்றிரவு வினோத்குமார் மது வாங்கிக்கொண்டுவந்து அந்தப் பெண்ணின் வீட்டருகே உள்ள விவசாய நிலப்பகுதியில் தனியாக அமர்ந்து குடித்து கொண்டிருந்தாராம். சம்பவ இடம் இதைக் கவனித்த ராகுல், அங்கு சென்று போதையில் இருந்த வினோத்குமாரை இரும்புக் கம்பியால் கொடூரமாகத் தாக்கியும், கழுத்தில் குத்தியும் கொலை செய்திருக்கிறார். அப்போது, `அவள் எனக்கு மட்டும்தான்’ என்று கூறி, கொலைக்குப் பயன்படுத்திய கம்பியையும் அங்குள்ள கிணற்றில் வீசிவிட்டு தப்பிச் சென்றதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். இதையடுத்து, ராகுலைக் கைது செய்த போலீஸார், நீதிமன்றக் காவலில் சிறையிலடைத்திருக்கின்றனர். போட்டோ ஷூட் என வரவழைத்து கொலை; தண்டவாளத்தில் சடலம் வீச்சு; விசாரணையில் வெளியான காதல் பின்னணி முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/crime/illegal-affair-involving-two-men-and-another-mans-wife-shocking-murder-incident-near-vellore




