பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே உள்ள காரை கிராமம், அண்ணா நகரை சேர்ந்தவர் முருகதாஸ் (53). இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், சோபனா (24) என்ற மகளும், முகேஷ் (22) மகனும் உள்ளனர். இந்நிலையில், சோபனாவிற்கு பிறந்த பொழுது இருந்தே, உடல் உபாதை கழிப்பதில் பிரச்னை இருந்து வந்தது. அந்த பிரச்னையால் அவர் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். இது தொடர்பாக, சில நாட்களாக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த ஒரு வார காலமாக சோபனா வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்தவர், வீட்டின் பின்புறம் உள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். perambalur இந்நிலையில், மகள் தூக்கிட்டு இறந்த துக்கம் தாளாமல் தவித்து வந்த முருகதாஸூம், மக்கள் இறந்த மறுநாளே அவரது மாட்டுக் கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால், அவரது உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மகள் மீது கொண்ட அளவில்லாத பாசத்தின் காரணமாக இப்படி முருகதாஸ் தற்கொலை செய்துகொண்டதாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து மகளும், தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/crime/daughter-father-suicide-shocked-perambalur



