ஒட்டாவா கனடாவில் உள்ள பூங்காவில் இளம்பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில், இந்திய வம்சாவளி நபர் கைது செய்யப்பட்டார். பாலியல் துன்புறுத்தல் கனடாவின் சர்ரே சிட்டி பகுதியில் உள்ள பியர் கிரீக் பூங்காவில் இளம்பெண்ணை ஒருவரை நபர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அந்த பெண் போலீசில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவானது. அந்த பெண் சர்ரே காவல் துறையினரிடம் அளித்த புகாரில், சந்தேகத்திற்குரிய அந்த நபர் 5 அடி 8 அங்குல உயரம் கொண்ட தெற்காசியாவை சேர்ந்தவர் ஆவார். அவர், தலையில் நீல நிற குல்லாவுடன், கருப்பு நிறத்தில் டி-ஷர்ட், பேண்ட் அணிந்து கொண்டு காணப்பட்டார் என தெரிவித்து உள்ளார். இந்திய வம்சாவளி நபர் இதுதொடர்பாக சந்தேகத்திற்குரிய நபரின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டு அவரை பற்றிய தகவலை அளிக்கும்படி பொதுமக்களிடம் கேட்டு கொண்டனர். இந்நிலையில், அந்நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர், இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜகேந்தர் குரானா என தெரிய வந்துள்ளது. அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில், அதுபற்றி விசாரணை நடைபெற உள்ளது. எனினும், இந்த வழக்கில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/world/canada-sexual-harassment-young-woman-park-indian-origin-man-arrested




