புதுடெல்லி, 'நீட்' வினாத்தாள் கசிந்த விவகாரம் நாடு முழுதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. நீட் வினாத்தாள் கசிவு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 3-ம் தேதி நடந்தது. வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரை அடுத்து, தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (NTA) ரத்து செய்தது. தொடர்ந்து, கடந்த 21ம் தேதி நீட் மறு தேர்வு நடந்தது. நீட் வினாத்தாள் அடிக்கடி கசிவதால், என்.டி.ஏ. அமைப்பு கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதையடுத்து, 'அடுத்தாண்டு முதல் நீட் தேர்வு கணினி வழி முறையில் நடத்தப்படும்' என, பா.ஜ.க, மூத்த தலைவரும், மத்திய கல்வி அமைச்சருமான தர்மேந்திர பிரதான் அறிவித்தார். தர்மேந்திர பிரதான் இந்த சூழலில் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தர் பகுதியில் கடந்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டத்துக்கு பல்வேறு அமைப்பினரும், கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். வன்முறை இதற்கிடையே நாடாளுமன்றத்தை நோக்கி கடந்த 20-ந்தேதி நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. இதில் மாணவர்கள் உள்பட 60-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் காயம் அடைந்தனர். இந்நிலையில் போராட்டக்காரர்கள் ஜந்தர் மந்தரை விட்டு தற்போது வரை வெளியேறவில்லை. இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க தினமும் ஏராளமான இளைஞர்கள் வெளியூர்களில் இருந்து வந்து கொண்டிருக்கிறார்கள். பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஜந்தர் மந்தரை சுற்றி இணைய சேவை முடக்கப்பட்டு இருக்கிறது. மெட்ரோ ரெயில் சேவைகள் தடை செய்யப்பட்டு உள்ளன. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இந்த போராட்டம் நீடித்து வருவது, டெல்லியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்படுகிறது. இதனிடையே நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பான 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' (CJP) அமைப்பின் கோரிக்கைகளுக்கு இணக்கமான தீர்வைக் காண்பதற்காக, அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர்களான சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோருடன் மத்திய மந்திரிகள் ஜிதேந்திர சிங் மற்றும் ஜே.பி.நட்டா ஆகியோர் இன்று( வெள்ளிக்கிழமை, ஜூலை 24) டெல்லியில் உள்ள விட்டல்பாய் படேல் இல்லத்தில் சந்தித்தனர். போராட்டங்கள் தொடரும் மத்திய அரசுடன் இன்று நடைபெற்ற இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் அல்லது அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' (CJP) வலியுறுத்தி உள்ளநிலையில், மாணவர் போராட்டங்கள் தொடரும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது. 47 அதிகாரிகள் பணி நீக்கம் இந்நிலையில் தேசிய தேர்வுகள் முகமை (NTA) 47 அதிகாரிகளை பணியிலிருந்து நீக்கியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. மேலும் அவர்கள் மீது மீது சட்டரீதியான மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளும் எடுக்கப்படவுள்ளன. வினாத்தாள் கசிவு விவகாரத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ள தேசிய தேர்வுகள் முகமையை முழுமையாக சீரமைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/47-nta-officials-sacked-amid-nationwide-student-protests-more-cleanup-to-follow




