லக்னோ, உத்தரபிரதேசத்தில் அரசு டாக்டர்களின் ஓய்வுபெறும் வயது 65 ஆக உள்ளது. மக்கள் தொகை அதிகம் கொண்ட அந்த மாநிலத்தில் அரசு ஆஸ்பத்திரிகள், சுகாதார நிலையங்களில் அதிகமான நோயாளிகள் தினமும் வருகை தருவதால் அவர்களை கையாளுவதற்கு போதிய டாக்டர்கள் இல்லை. எனவே அரசு டாக்டர்களின் ஓய்வு வயதை நீட்டிக்க மாநில அரசு முடிவு செய் துள்ளது. அதன்படி 65 வயதில் ஓய்வு பெறும் டாக்டர்களை மறு நியமனம் மூலம் 70 வயது வரை பணியாற்றும் திட்டத்தை அரசு அறிவித்து உள்ளது. இதன் மூலம் அரசு சுகாதாரத்துறை மேலும் வலுப்பெறும் என மாநில சுகாதார மந்திரியும், துணை முதல்-மந்திரியுமான பிரஜேஷ் பதக் கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/retirement-age-of-government-doctors-extended-in-uttar-pradesh




