சென்னை, தாம்பரம் செங்கல்பட்டு இடையே, 4வது புதிய பாதை உட்பட மூன்று ரெயில் பாதை திட்டங்கள், 2,576 கோடி ரூபாயில் செயல்படுத்த, ரெயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியை, தெற்கு ரெயில்வே விரைவில் தொடங்க உள்ளது. தெற்கு ரயில்வேயில் நெரிசல் மிக்க பிரதான வழித்தடங்களில், கூடுதல் ரயில் பாதைகள் அமைக்க, ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கி வருகிறது. சென்னை புறநகரில் அதிக நெரிசலை கொண்டுள்ள தாம்பரம் செங்கல்பட்டு தடத்தில், 713 கோடி ரூபாயில் நான்காவது புதிய பாதை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. அரக்கோணம் - செங்கல்பட்டு இதேபோல், அரக்கோணம் - செங்கல்பட்டு தடத்தில் 929 கோடி ரூபாயில், இரட்டை பாதை அமைக்க வும், ஈரோடு - கரூர் தடத்தில் 934 கோடி ரூபாயில் இரட்டை பாதை அமைக் கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அடுத்த கட்ட பணிகளை, தெற்கு ரயில்வே தொடங்கி உள்ளது. இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது; தெற்கு ரயில்வேயில் விரைவு, குறுகிய துார பயணியர் ரயில்கள், மின்சார ரயில்கள் என, 1,400 ரயில்கள் இயக்கப்படுகின்றன. கடந்த நிதி ஆண்டில் மட்டும், 152.75 கோடி பேர் பயணம் செய்தனர். இதன் வாயிலாக, 8,215 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. தாம்பரம் -செங்கல்பட்டு கூடுதல் பாதைகள் அமைப்பது, ரயில் நிலையங்கள் மேம்பாடு, சிறப்பு ரயில்கள் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வறு திட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறோம். ' தாம்பரம் -செங்கல்பட்டு இடையே, 4வது பாதை, அரக்கோணம் செங்கல்பட்டு மற்றும் கரூர் தடத் ஈரோடு தில், இரட்டை பாதைகள் என, 2,576 கோடி மதிப்பிலான பணிகளுக்கு ரயில்வே ஒப்புதல்அளித்துள்ளது. நிலம் கையகப்படுத்துவது, கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ள, 'டெண்டர்' வெளியிட உள்ளோம். இதேபோல், திருச்சி, மதுரை, கேரளா மாநிலம் பாலக்காடு கோட்டங்களிலும், பல்வேறு ரயில் பாதை பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும் முடியும்போது, 2030ல், தற்போதுள்ளதை காட்டிலும், 50 சதவீதம் கூடுதலாக ரயில்கள் இயக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/railways-approves-three-rail-line-projects-in-tamil-nadu




