கல்லக்குடி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி-மேலரசூர் சாலையில் கல்லக்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வாலிபர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. அபராதம் மேலும் அவர் ஹெல்மெட்டும் அணியவில்லை. இதனால் அவருக்கு போலீசார் அபராதம் விதித்த நிலையில், அந்த வாலிபர் தனது மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் கவரில் வைத்திருந்த கத்தியை எடுத்து போலீசாரை வெட்ட முயன்றார். உடனடியாக சுதாரித்து கொண்ட போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர் கோவாண்டகுறிச்சி கிராமத்தை சேர்ந்த மாணிக்கராஜின் மகன் ராஜ் (வயது 25) என்பதும், இவர் அரியலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் சிமெண்டு ஆலையின் லாரி செட்டில் மேற்பார்வையாளராக பணி செய்து வருவதும், கல்லக்குடி ராஜா தியேட்டர் பகுதியில் குடியிருந்து வருவதும் தெரிய வந்தது. இது குறித்து கல்லக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜை கைது செய்து, லால்குடி குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/outrage-over-fine-imposed-youth-arrested-for-trying-to-attack-police-with-knife




