சென்னை, தமிழ்நாடு அரசு விளையாட்டுத்துறைக்கு அதிக அளவில் முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதனால் பல்வேறு வகையான விளையாட்டுகளினுடைய சர்வதேச போட்டிகள் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடத்தப்பட்டன. அந்த வகையில், சென்னையில் உலக தரத்திலான மெகா ஸ்போர்ட் சிட்டி எனும் விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என்று 2023-ம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். இந்த விளையாட்டு நகரத்தை அமைக்க தகுந்த இடத்திற்கான ஆய்வுகள் நடந்தன. அதில் செம்மஞ்சேரி, வண்டலூர், குண்டம்பாக்கம் உள்ளிட்ட 3 இடங்களில் இந்த விளையாட்டு நகரம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக கண்டறியப்பட்டது. இதனையடுத்து, செம்மேஞ்சேரியை தேர்வு செய்து அங்கு விளையாட்டு நகரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த விளையாட்டு நகரத்தில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான வீரர்கள் பயிற்சி பெறும் வகையிலும் சர்வதேச அளவில் போட்டிகள் நடைபெறும்போது வெளிநாட்டு வீரர்கள் வந்து செல்ல வசதியாக சென்னை விமான நிலையத்துக்கு அருகேயும் இந்த விளையாட்டு நகரத்தை அமைக்க அரசு திட்டமிட்டிருந்தது. இதையடுத்து அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு செய்து விளையாட்டு நகரத்தை அமைக்க ஆர்பிபி என்ற நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், செம்மஞ்சேரியில் சர்வதேச தரத்தில் மெகா விளையாட்டு நகரம் அமைக்க திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பணி ஆணையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. 112 ஏக்கரில் ரூ.206 கோடியில் விளையாட்டு நகரம் அமைக்க ஆர்பிபி என்ற நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டிருந்தது. அதனை ரத்து செய்துள்ளதாக அந்நிறுவனத்திற்கு அரசு கடிதம் அனுப்பியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/work-order-issued-for-setting-up-a-sports-city-in-semmancheri-cancelled




