எலும்பு ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கால்சியம் மிக முக்கியம் என்பதை பெரும்பாலானவர்கள் அறிவார்கள்; ஆனால், தாங்கள் உட்கொள்ளும் கால்சியத்தின் வகை மற்றும் தரம் மிக முக்கியம் என்பதை சிலர் மட்டுமே அறிந்துள்ளனர். கால்சியம் உணவுகள் மற்றும் இணை உணவுகள் மூலமாகவோ, அல்லது வைட்டமின் டி3 உடன் இணைந்தோ கிடைக்கிறது. எனினும், கால்சியத்தை நன்கு உறிஞ்சிப் பயன்படுத்தும் உடலின் திறன் என்பது, கால்சியத்தின் வடிவம், உட்கொள்ளப்படுவதில் உறிஞ்சப்படக் கூடிய கால்சியத்தின் அளவு மற்றும் வைட்டமின் டி3 போன்ற துணை ஊட்டச்சத்துக்களின் இருப்பு உட்பட்ட பல காரணிகளைச் சார்ந்துள்ளது1. கால்சியம் முக்கியம் உடல் தானாகவே கால்சியத்தை உற்பத்தி செய்ய இயலாது என்பதால், வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும், குறிப்பாக வளர்ச்சி, கர்ப்பம், மெனோபாஸ் மற்றும் முதுமை போன்ற காலகட்டங்களில், உணவு அல்லது இணை உணவு மூலம் போதிய அளவு கால்சியம் உட்கொள்வது மிக முக்கியம்1. கால்சியம் சால்ட் பல்வேறு வகையான கால்சியம் சால்ட்கள் கிடைக்கின்றன; அவை உறிஞ்சப்படும் விதம், அவற்றில் உள்ள உறிஞ்சப்படக் கூடிய கால்சியத்தின் அளவு மற்றும் உடல் ஏற்கும் தன்மை ஆகியவற்றில் வேறுபடுகின்றன. வைட்டமின் டி3, கால்சியம் உறிஞ்சப்படுவதற்கு கூடுதலாக உதவுவதுடன், எலும்புகளின் சிறந்த ஆரோக்கியத்திற்காக உடல் கால்சியத்தை நன்கு பயன்படுத்தவும் உதவுகிறது1. பொதுவான சில வகை கால்சியம் சால்ட்கள் *கால்சியம் கார்பனேட் (~40% அடிப்படை கால்சியம்) 2 இது இயற்கையாகப் பெறப்படுகிறது மற்றும் இதில் அடிப்படை கால்சியம் மிக அதிக அளவில் உள்ளது. உணவோடு சேர்த்து உட்கொள்ளும்போது, இது உடலால் நன்கு உறிஞ்சப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.இது உலகம் முழுவதும் மிகவும் விரும்பப்படும் மற்றும் பரிந்துரைக்கப்படும் கால்சியம் சால்ட்களில் ஒன்றாகும். *கால்சியம் சிட்ரேட் (~21%) 2 இது கால்சியத்தின் கரையக் கூடிய ஒரு வடிவமாகும்; இதில் உள்ள அடிப்படை கால்சியத்தின் அளவு குறைவு என்பதால், தினசரி கால்சியத் தேவையைப் பூர்த்தி செய்ய அதிக அளவுகளில் உட்கொள்ள வேண்டியிருக்கும். இரைப்பை பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு அல்லது வயிற்றில் அமிலச் சுரப்பு குறைவாக உள்ளவர்களுக்கு இது ஏற்றதாக இருக்கலாம் 3. *கால்சியம் சிட்ரேட் மாலேட் (~21-23 %)4 இது உடலில் நன்கு உறிஞ்சப்படக் கூடியது என்றாலும், குறிப்பாக முதியவர்களுக்கு இதில் உள்ள அடிப்படை கால்சியம் அளவு குறைவு; இதில் கால்சியம் அளவு குறைவாக இருப்பதால், உடலுக்குத் தேவையான தினசரி கால்சியம் அளவைப் பூர்த்தி செய்ய அதிக எண்ணிக்கையில் மாத்திரைகளை சாப்பிட வேண்டியிருக்கும். *கால்சியம் லாக்டேட் (~18%)4 இதன் கரையும் திறன் அதிகம். ஆனால் ஒரு டோஸில் அடிப்படை கால்சியத்தை குறைவாக அளிக்கிறது. எலும்புகளுக்கு நீண்டகால ஆரோக்கியம் அளிக்க, உடலில் கால்சியத்தின் பல்வேறு வகைகள் எவ்வாறு செயல்படுகின்றன மற்றும் உறிஞ்சப்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்வது முக்கியம். நன்கு உருவாக்கப்பட்ட கால்சியம் இணை உணவுப் பொருள் உடலுக்குத் தேவையான தகுந்த அளவிலான கால்சியத்தை அளிக்க மற்றும் அதை தினமும் எளிதாக உட்கொள்ள உதவுகிறது. கால்சியம் இணை உணவுப் பொருட்களில் தரம் ஏன் முக்கியம்? சந்தையில் ஏராளமான இணை உணவுப் பொருட்கள் கிடைப்பதால், அவற்றின் தரம் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவை முக்கியமான அம்சங்களாக ஆகியுள்ளன. போலியான அல்லது தரமற்ற பொருட்கள் தயாரிப்பின் செயல்திறனைப் பாதிப்பதோடு உடல்நலத்தில் அபாயங்களையும் ஏற்படுத்தலாம். எனவே, நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட ஒரு தயாரிப்பைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். ஷெல்கால்500 - தினசரி கால்சியத்துக்கு நம்பகமான சாய்ஸ் பல ஆண்டுகளாக ஷெல்கால்500 எலும்பு ஆரோக்கியத்துக்கு ஆதரவளிக்கும் ஒரு தயாரிப்பு என அறியப்பட்டுள்ளது. உடலின் கால்சியம் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், கால்சியம் உட்கொள்தல் மற்றும் அது உடலில் உறிஞ்சப்படுவதற்கு உதவும் விதத்தில் இது உருவாக்கப்பட்டுள்ளது. தினசரி நடைமுறைகளில் எளிதாகப் பின்பற்றும் விதத்திலும், எலும்பு ஆரோக்கியத்திற்குத் தேவையான அன்றாட கால்சியத்தை வழங்கவும் இது உதவுகிறது. • ஷெல்கால்-ன் அடிப்படை கால்சியம் இயற்கையான மற்றும் செறிவான மூலங்களிலிருந்து பெறப்படுகிறது. • இது கட்டுப்பாடான உற்பத்தி செயல்முறையின் மூலம் தயாரிக்கப்படுகிறது • ஷெல்கால்-ல் உள்ள வைட்டமின் டி3 கால்சியம் உறிஞ்சப்படும் திறனை மேம்படுத்துகிறது • சிறந்த உறிஞ்சும் திறன் கொண்ட, இயற்கையான மூலங்களிலிருந்து பெறப்பட்ட அடிப்படை கால்சியம். போலி தயாரிப்புகளை தடுக்க க்யூஆர் குறியீடு இந்தத் தயாரிப்பின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த, இதில் போலியான தயாரிப்புகளைத் தடுக்கும் அம்சங்களும் க்யூஆர் குறியீடும் உள்ளன. தினசரி கால்சியத் தேவைக்கு ஷெல்கால் ஒரு நம்பகமான தேர்வாகத் தொடர்கிறது. இது இந்தியாவில் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் நம்பர் 1 கால்சியம் தயாரிப்பாகும்* கால்சியத்தின் பயன்மிக்க செயல்பாடு என்பது உட்கொள்தலை மட்டும் சார்ந்ததல்ல; அதற்கு மாறாக, சரியான வகை கால்சியம், உடலால் சிறப்பாக உறிஞ்சப்படுதல், தரமான தயாரிப்பு மற்றும் தினமும் தவறாமல் உட்கொள்தல் ஆகியவற்றையும் அது சார்ந்துள்ளது. எனவே, நீண்ட கால அளவில் எலும்பு ஆரோக்கியத்திற்கு, உணவு மற்றும் உடற்பயிற்சியுடன் சேர்த்து, நம்பகமான கால்சியம் இணை உணவுப் பொருளைத் தேர்ந்தெடுப்பதும் மிக முக்கியமானவற்றில் ஒன்று. பொறுப்புத் துறப்பு: இந்த விளம்பர தகவல் கட்டுரை, விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தகவலறிவு முயற்சியாகும். இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோய் கண்டறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்று ஆகாது. எலும்புகளின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து இணை உணவுகள் பற்றி தகுதிவாய்ந்த ஆரோக்கிய நிபுணர்களிடம் ஆலோசனை பெறும்படி இதை படிப்பவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். கால்சியம் தயாரிப்புகளுக்கான *SMSRC Rx ரிசர்ச் தரவு, MAT பிப்ரவரி,2026. Reference: 1https://ods.od.nih.gov/factsheets/Calcium-HealthProfessional/ 2Pereira, Giselle & Genaro, Patrícia & Pinheiro, Marcelo & Szejnfeld, Vera & Martini, Lígia. (2009). முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/advertorial/calcium-absorption-bone-health-vitamin-d3-shelcal-500




