மும்பை, பிரபல பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூர், கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் டேட்டிங் செய்து வருவதாக சமூக வலைதளங்களில் பரவி வந்த தகவலுக்கு கடும் பதிலடி கொடுத்துள்ளார். இந்த வதந்தி தொடர்பான சமூக வலைதளப் பதிவுக்கு மிருணாள் தாக்கூர் நேரடியாக பதிலளித்துள்ளார். ‘சீதா ராமம்’, ‘ஹாய் நானா’ உள்ளிட்ட படங்கள் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் நடிகை மிருணாள் தாக்கூர். தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் ‘ராக்கா’ படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, மிருணாள் தாக்கூர் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை காதலித்து வருவதாகவும், இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. எப்படி தொடங்கியது சர்ச்சை? மிருணாள் தாக்கூரும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் சமீபத்தில் மும்பை பாந்த்ராவில் உள்ள பிரபல உணவகம் ஒன்றிற்கு ஒன்றாக சென்றதாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து, இருவரும் காதலித்து வருவதாகவும், டேட்டிங் செய்து வருவதாகவும் செய்திகள் பரவத் தொடங்கின. மேலும், 34 வயதான மிருணாள் தாக்கூர் தன்னைவிட சுமார் 10 வயது இளைய யஷஸ்வி ஜெய்ஸ்வாலை காதலிப்பதாக கூறப்பட்டதால், இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. மிருணாள் பரபரப்பு பதில்! இந்த நிலையில், மிருணாள் தாக்கூர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடர்பான பதிவொன்றை பார்த்த நடிகை அதற்கு நேரடியாக பதிலளித்துள்ளார். அந்தப் பதிவில், "ப்ரோ. கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்கள்! நாங்கள் எங்கே ஒன்றாக இருக்கிறோம் என்று காட்டுங்கள்? படித்தவர்கள் கூட இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற வதந்திகளை எப்படி உண்மையென நம்புகிறீர்கள்? நாட்டில் பேச வேண்டிய எவ்வளவோ முக்கிய விஷயங்கள் இருக்கின்றன. Gen Z தலைமுறையினரிடம் இருந்து கற்றுக் கொண்டு, பயனுள்ள நல்ல விஷயங்களில் கவனம் செலுத்தி வீடியோக்களை உருவாக்குங்கள், அப்போது தான் நிறைய வியூஸ் கிடைக்கும்" என்று பதிலடி கொடுத்துள்ளார். இதன் மூலம் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் டேட்டிங் செய்வதாக வெளியான தகவல்களுக்கு மிருணாள் தாக்கூர் மறுப்பு தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/dating-yashasvi-jaiswal-actress-puts-an-end-to-the-rumors




