"என்னுடைய காணொளி வெளியான பின்பு நடக்கும் நிகழ்வுகள் எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் எனக்கு எதிராக உருவ கேலி அதிகளவில் நடக்கிறது. இதனால் மனமுடைந்து அழுதேன்," என்கிறார் பிபிசி தமிழிடம் பேசிய வினோஷா ரவி. தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் கீர்த்தனாவை குறிவைத்து இணையத்தில் நடைபெறும் கேலிகள், ட்ரோல்கள் மலேசியாவை சேர்ந்த தமிழ் பெண் வினோஷா ரவி வரை நீண்டுள்ளது. தன்னுடைய காணொளியை யாரோ ஒருவர் அமைச்சர் கீர்த்தனா எனக்கூறி சமூக வலைதளங்களில் பதிவிட்டதையடுத்து, தனக்கு இணையத்தில் ட்ரோல்கள் அதிகரித்துள்ளதாக வினோஷா ரவி கூறுகிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.bbc.com/tamil/articles/c1e5py5p5gyo



