பீஜிங், இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினை குறித்த சிறப்புப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக, இந்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று(திங்கள்கிழமை) சீனா சென்றடைந்துள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் சீனாவின் சிறப்பு பிரதிநிதியும், வெளியுறவுத்துறை மந்திரியுமான வாங் யீ கலந்துகொள்ள உள்ளார். செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டிற்காக சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்தியா வர உள்ள சூழலில், சீனாவில் அஜித் தோவல்-வாங் யீ இடையில் நடைபெறவுள்ள சிறப்புப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெறுகிறது. சீனாவில் அஜித் தோவல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். எல்லை மற்றும் அருணாச்சலப் பிரதேசம் தொடர்பான விவகாரங்களில் இந்தியா-சீனா இடையிலான இருதரப்பு உறவில் கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் சூழலில், அஜித் தோவலின் இந்த பயணம் கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/world/two-day-visit-national-security-advisor-ajit-doval-arrives-in-china




