ஐதராபாத் இந்து கடவுள்கள் சிவன், ராமன் பற்றி தெலுங்கானா முதல்-மந்திரி சர்ச்சையாக பேசியதற்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. டெல்லியில் நடந்த ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த்ரெட்டி பேசினார். அப்போது அவர், சிவன் ஏழைகளின் கடவுள், ராமன் பணக்காரர்களின் கடவுள், பா.ஜ.க. பணக்காரர்களின் கட்சி என்று கூறினார். மேலும் நாங்கள் திராவிடர்கள். வடக்கில் உள்ளவர்கள் ஆரியர்கள். நாங்கள் சிவபெருமானின் பக்தர்கள். அவர்கள் ராமனின் பக்தர்கள். பா.ஜ.க. ஸ்ரீராமரை திருடிவிட்டது. அது அவர்களுக்கு ஒரு உணர்ச்சிபூர்வமான விஷயம் என்று அவர் குறிப்பிட்டார். இந்த பேச்சு சர்ச்சையானது. அரசியல் ரீதியான பிளவு ரேவந்த்ரெட்டியின் இந்த கருத்துக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடவுளை முன்வைத்து நாட்டில் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளுக்கு இடையே ரேவந்த்ரெட்டி அரசியல் ரீதியான பிளவை உண்டாக்க பார்க்கிறார் என்று மத்திய மந்திரி பண்டி சஞ்சய் குமார் குற்றம் சாட்டினார். எனினும், பா.ஜ.க. அடிக்கடி ஜெய் ஸ்ரீராம் என கூறி வருகிறது என்றும், ஏன் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் ஹர ஹர மகாதேவா என உச்சரிப்பதில்லை என்றும் ரேவந்த் ரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், பிரதமர் மோடிக்கு காசி விஸ்வநாதர் கோவிலுடன் உள்ள தொடர்பை பண்டி குறிப்பிட்டு பேசினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/telangana-cm-remarks-on-hindu-gods-spark-row




