கவுகாத்தி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் திருவனந்தபுரத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது சர்வதேச ஒரு நாள் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் பகல்-இரவு மோதலாக நேற்று நடந்தது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக நிதிஷ்குமார் ரெட்டிக்கு பதிலாக அறிமுக வீரராக ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த வேகப் பந்து வீச்சாளர் ஆகிப் நபி சேர்க்கப்பட்டார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டன. 'டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் சுப்மன் கில் முதலில் வெஸ்ட் இண் டீசை பேட் செய்ய அழைத்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள், பேட்டிங்குக்கு சொர்க்கப்புரியான இந்த ஆடு களத்தில் ரன்மழை பொழிந்தனர். முதலில் தொடக்க ஆட் டக்காரர் ஜான் கேம்ப்பெல் 65 பந்துகளில் தனது 2-வது சதத்தை எட்டி னார். இந்தியாவுக்கு எதிராக மின்னல் வேகத்தில் சதம் அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற சிறப்பை பெற்ற கேம்ப்பெல் 101 ரன்களில் (68 பந்து, 9 பவுண்டரி, 5 சிக்சர்) கேட்ச் ஆனார். இதன் பின்னர் கேப்டன் ஷாய் ஹோப்பும், அமிர் ஜாங்கூவும் இணைந்து நிலைத்து நின்று ஆடியதுடன் இவர்களும் மூன்று இலக்கத்தை எட்டி பட் டையை கிளப்பினர். 20-வது சதத்தை பூர்த்தி செய்த ஷாய் ஹோப் 104 ரன்களிலும் (94 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்), தனது 2-வது சதத்தை அடித்த ஜாங்கூ 114 ரன்களிலும் (77 பந்து, 13 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட் டமிழந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் 7 விக் கெட்டுக்கு 405 ரன்கள் குவித்தது. ஒரு நாள் போட்டியில் அந்த அணி 400 ரன்களை தாண்டுவது இதுவே முதல் முறையாகும். எக்ஸ்டிரா வகை யில் அந்த அணிக்கு 20 வைடு உள்பட 23 ரன்கள் கிடைத்தது. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குர்னூர் பிரார் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அடுத்து 406 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி இந்தியாவின் இன்னிங்சை ரோகித் சர்மாவும், கேப்டன் சுப்மன் கில்லும் தொடங்கினர். ஆரம்பத்தில் சற்று நிதானம் காட்டிய இவர்கள் வலுவாக காலூன்றிய பிறகு பந்துகளை மைதானத்தின் நாலாபுறமும் தெறிக்க விட்டனர். ரோகித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர் கீமோ பாலின் ஒரே ஓவரில் ஒரு பவுண்டரி, 2 சிக்சர் விரட்டி ரசிகர்களை குஷிப்படுத்தினார். இதே போல் ரோஸ்டன் சேசின் பந்து வீச்சில் கில் இரு சிக்சர் ஓடவிட்டு விருந்து படைத்தார். தொடர்ந்து ரன்வேட்டை நடத்திய இவர்கள் ரன் ரேட்டை 9-க்கு குறையாமல் பார்த்துக் கொண்டனர். இதனால் அணி வெற்றியை நோக்கி துரிதமாக பயணித்தது. அபாரமாக ஆடிய சுப்மன் கில் 62 பந்துகளில் தனது 11-வது சதத்தை சுவைத்தார். சிறிது நேரத்தில் ரோகித் சர்மா 35-வது சதத்தை பதிவு செய்தார். அணியின் ஸ்கோர் 255-ஆக உயர்ந்த போது (26.2 ஓவர்) தொடக்க ஜோடி பிரிந்தது. ரோகித் சர்மா 101 ரன்களில் (75 பந்து, 10 பவுண்டரி. 6 சிக்சர்) எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து வந்த விராட் கோலி 29 ரன் களில் எல்லைக்கோடு அருகே சிக்கினார். மறுமுனையில் ருத்ரதாண்டவ மாடிய சுப்மன் கில் வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர்களை கதறடித்தார். இவர் 117 பந்துகளில் தனது 2-வது இரட்டை சதத்தை நிறைவு செய்தார். இதன் மூலம் அதிவேக இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இதற்கு முன்பு இஷான் கிஷன் 126 பந்தில் (வங்காளதே சத்துக்கு எதிராக) இரட்டை சதம் அடித்ததே இந்த வகையால் சாதனையாக இருந்தது. மேலும் 2-வது பேட்டிங்கில் இந்தியர் ஒருவர் இரட்டை செஞ்சுரி அடிப்பதும் இதுவே முதல் முறையாகும். இந்திய அணி 43.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 406 ரன்கள் திரட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பெற்றது. ஒரு நாள் போட்டியில் இந்தியா 400 ரன்களுக்கு மேலான இலக்கை விரட்டிப்பிடிப்பது இதுவே முதல் முறையாகும். சுப்மன் கில் 223 ரன்களுடனும் (133 பந்து, 26 பவுண்டரி 8 சிக்சர்), ருதுராஜ் கெய்க்வாட் 31 ரன்களுடனம் அவுட் ஆகாமல் இருந்தனர். வெற்றி தொடர்பாக பேசிய இந்திய அணியின் கேப்டன் கில் கூறியதாவது, அவர்கள் விளையாடிய விதம் அப்படி இருந்தது. ஒட்டுமொத்தமாக இது ஒரு சிறந்த போட்டி. இன்னிங்ஸின் பாதியில் 400 ரன்கள் ஸ்கோர்போர்டில் இருந்தபோது எங்களுக்கு கொஞ்சம் அழுத்தம் இருந்தது. ஆடுகளம் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும், மைதானம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும், 400 ரன்களைத் துரத்துவது ஒருபோதும் எளிதானது அல்ல. அதனால் எங்களுடைய செயல்பாட்டில் மிகவும் மகிழ்ச்சி. கடைசி வரை களத்தில் இருந்து அணிக்காக ஆட்டத்தை முடித்ததில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். முதலில், பவர் பிளேயில் விக்கெட் எதையும் இழக்காமல் சுமார் 75–80 ரன்கள் எடுக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய இலக்கு. ஆரம்பத்தில் புதிய பந்து கொஞ்சம் ஸ்விங் ஆகலாம். பந்து பழையதாகிவிட்டால் பேட்டிங் செய்வதற்கு ஆடுகளம் இன்னும் சிறப்பாக இருக்கும். மேலும், மைதானத்தின் ஒரு பக்கம் மிகவும் சிறியதாக இருந்ததால், வேகப்பந்து வீச்சாளர்கள் வரும்போது அந்தப் பக்கத்தை இலக்காகக் கொள்ள வேண்டும் என்று நினைத்தோம். ஒரு கட்டத்தில் அவர்கள் 420–430 ரன்கள் வரை எடுக்கக்கூடும் என்று தோன்றியது. ஆனால் போட்டியின் கடைசி கட்டத்தில் அவர்களின் ஸ்கோரிலிருந்து 25–30 ரன்களைக் குறைக்க முடிந்ததே எங்களுக்கு ஒரு கூடுதல் பலனாக இருந்தது. என தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/cricket/victory-against-the-west-indies-team-what-did-the-indian-captain-say




