Full Article
திருச்சி மாநகரம், காந்தி மார்க்கெட் அருகே உள்ள கால்மந்தை காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவர், அப்பகுதியில் உள்ள பொது கழிப்பறையில் உயிரிழந்து கிடந்ததாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீஸார் அங்கு சென்று விசாரித்ததில் அவர் அருகே போதை ஊசி கிடந்துள்ளது. அவர் உடலை மீட்ட போலீஸார் உடற்கூராய்வு மேற்கொள்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு, போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் போதை ஊசி செலுத்திக்கொண்டபொழுது ராஜமாணிக்கம் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. அவருக்கு போதை ஊசி எங்கிருந்து கிடைத்தது, முதன்முறையாக போதை ஊசி செலுத்திக்கொள்கிறாரா அல்லது தொடர்ச்சியாக அவர் செலுத்திக்கொள்வாரா என்பது குறித்தெல்லாம் போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த ராஜமாணிக்கம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அரியமங்கலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னுடைய காதலனுடன் சேர்ந்து போதை ஊசி செலுத்திக்கொண்ட பொழுது உயிரிழந்த நிலையில், இன்று மற்றொரு இளைஞர் போதை ஊசியால் உயர்ந்த சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், போதைப்பொருள்களைக் கட்டுப்படுத்த போலீஸார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பெரும்பாலானோரின் கோரிக்கையாக உள்ளது. மது, போதை, சூதாட்டம்... கல்லாகட்டும் மனமகிழ் மன்றங்கள்! - கைகட்டி நிற்கும் காவல்துறை முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Full article — see link below




