நேபளத்தில் ஏற்பட்ட வெள்ளம் அந்த நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற இந்தியர்களும் நேபாள வெள்ளபாதிப்பில் சிக்கியுள்ளனர். கிட்டதட்ட 300 இந்தியர்கள் மாயமாகியிருப்பதாக நேபாள அரசு தெரிவித்துள்ள நிலையில், கோவை ஈஷா யோகா மையத்தை சேர்ந்த குழுவினர் 80 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார். இது தொடர்பாக ஜக்கி வாசுதேவ் கண்கலங்கியபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: - நேபாளத்திற்கு புனித யாத்திரை சென்ற ஈஷா மையத்தை சேர்ந்த 80 பேர் கொண்ட குழுவுடன் தொடர்பில்லை. 80 பேரில் 34 ஆண்கள், 46 பெண்கள் இருந்தனர். ஈஷா குழுவில் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்தை சேர்ந்தவர்கள். மாயமானவர்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் கிடைக்கவில்லை. தொலைத்தொடர்பு சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. சாகா பகுதியில் சந்தித்த S3 குழுவில் 80 பேர் இருந்தனர்” என்று தெரிவித்துள்ளார். நேபாள வெள்ளம்: நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் வடக்கே அமைந்துள்ளது ரசுவா மாவட்டம்.இந்த மாவட்டத்தின் வடக்கு பகுதியில் உள்ள ரசுவாகடி பகுதி, நேபா ளம்-திபெத் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. திபெத்தின் இமயமலை பகுதியில் உருவாகும் லெண்டே கோலா ஆறு, நேபாளம்-திபெத் எல் லைப்பகுதி வழியாக பாய்ந்து ரசுவாகடி பகுதியை அடைகிறது. இந்த ஆறும், பிற சிறிய ஆறுகளும் ரசுவாகடி பகுதியில் ஒன்றிணைந்து 'போடேகோஷி' ஆறாக கீழ்நோக்கிப் பாய்கின்றன. இந்த ஆற்றில் நேற்று காலை 8.30 மணியளவில் திடீரென பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ரசுவா மற்றும் அருகில் உள்ள நுவாகோட் மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஆற்றின் இருபுறமும் உள்ள வீடுகள் வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்டன.குறிப்பாக டிமுரே, சியாப்ருபேசி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 60 வீடுகள் முழுமையாக ஆற்றில் அடித்து செல்லப்பட்டன. மீட்பு பணி மேலும் அந்த பகுதியில் இருந்து சீன எல்லையை இணைக்கும் 42 கிலோ மீட்டர் சாலைகள் முழுமையாக சேதம் அடைந்தன. அதனால் போக்குவரத்து துண்டிக்கப் பட்டது.வெள்ளத்தால் மின்கம்பிகள் மற்றும் செல்போன் கோபுரங்கள் சாய்ந்து விழுந்ததால் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு, செல்போன் சேவைகள் பாதிக்கப்பட்டன. இந்த தகவல் அறிந்ததும் நேபாள ராணுவம் மற்றும் போலீசார் உடனடியாக மீட்பு பணியில் களம் இறங்கினர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் தனியார் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டன. வெள்ளத்தில் சிக்கிய பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் மற்றும் பாலங்கள் சேதம் அடைந்ததால், பல இடங்களில் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/world/jaggi-vasudev-has-stated-that-there-is-no-official-information-regarding-the-missing-persons




