தெஹல்கா பத்திரிகை நிறுவனரும் ஆசிரியருமான தருண் தேஜ்பால் 2013ம் ஆண்டு அந்த இதழ் ஏற்பாடு செய்திருந்த 'திங்க்ஃபெஸ்ட்' நிகழ்வின்போது, கோவாவில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் வைத்து, நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் தன்னிடம் பணியாற்றிய பெண்ணை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார். இவ்வழக்கில் 2021-ஆம் ஆண்டு மே மாதம் கோவா விசாரணை நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. ஆனால், அந்த உத்தரவை எதிர்த்து கோவா அரசு மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதனை விசாரித்த உயர் நீதிமன்றம், அவரது விடுதலையை ரத்து செய்து, அவரை குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது. அதோடு அவருக்கு இவ்வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. சாட்சியாக மாறிய மின்னஞ்சல் இவ்வழக்கு விசாரணையின் போது, பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தேஜ்பால் அனுப்பிய மின்னஞ்சல் முக்கிய ஆதாரமாக முன்வைக்கப்பட்டது. அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா அதனை கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார். அந்த மின்னஞ்சல் செய்தியில், "என்னுடன் பணியாற்றிய சக ஊழியர் ஒருவரின் மகளாகவும், பின்னர் எனது அலுவலகத்திலேயே ஒரு சக ஊழியராகவும் நான் மிகவும் பெருமைப்பட்ட ஒரு இளம் பெண் நீங்கள். மிகுந்த நேர்மையும் சிறந்த எதிர்காலமும் கொண்ட ஒரு பத்திரிகையாளராக நீங்கள் தொழில்ரீதியாக வளர்ந்து முதிர்ச்சியடைந்ததை நான் பார்த்திருக்கிறேன். எனவே, நமக்கிடையேயான அந்த நீண்டகால நம்பிக்கையையும் மரியாதையையும் கொண்ட உறவை நான் மீறிவிட்டேன் என்பதை ஏற்றுக்கொள்வது எனக்கு விவரிக்க முடியாத வேதனையை அளிக்கிறது. நவம்பர் 7 மற்றும் 8, 2013 ஆகிய தேதிகளில் உங்களுடன் பாலியல் ரீதியான தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள நான் முயன்ற அந்த அவமானகரமான தவறுக்கு வேண்டாம் என்று நீங்கள் தெளிவாக மறுப்புத் தெரிவித்திருந்த போதிலும் நான் அத்தவறை செய்தேன். அதற்காக நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்," என்று அவர் எழுதினார். இது அத்தகைய சம்பவங்கள் நடந்ததை ஒப்புக்கொள்வதற்குச் சமம் என்று துஷார் மேத்தா வாதிட்டார். அப்பெண் ஊழியர் நடந்த சம்பவம் தொடர்பாக தெஹல்கா நிர்வாக ஆசிரியரிடம் புகார் அளித்த மறுநாள் அதாவது நவம்பர் 19ம் தேதி தருண் தேஜ்பால் இந்த மின்னஞ்சலை எழுதியிருந்தார். பாதிக்கப்பட்ட பெண் தேஜ்பாலிடம், நீங்கள் எனது பாஸ் என்று குறிப்பிட்டதாகவும், அது இன்னும் எளிதாகிவிட்டது என்று கூறி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக துஷார் மேத்தா தெரிவித்தார். கீழ் கோர்ட் தருண் தேஜ்பாலை விடுவித்ததை விமர்சித்த நீதிமன்றம், உடல் ரீதியான எதிர்ப்பு இல்லாதது சம்மதமாக இருக்காது என்று சட்டம் தெளிவாக சொகிறது. ஐபிசியின் 375வது பிரிவைக் குறிப்பிட்டு, உடல் ரீதியாக எதிர்க்காத ஒரு பெண் அந்த காரணத்தால் மட்டும் பாலியல் செயல்பாடுகளுக்கு சம்மதிப்பதாகக் கருதப்பட மாட்டாள் என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டனர். இத்தீர்ப்பு குறித்து தருண் தேஜ்பால் கூறுகையில்,''அரசியல் பழிவாங்கும் நோக்கம் மற்றும் தெஹல்கா மேற்கொண்ட பணிகள் காரணமாகவே என்னை குறி வைக்கின்றனர். கடந்த 13 ஆண்டுகளாகப் பழிவாங்கும் உணர்வுடன் அவர்கள் என்னை குறிவைத்து வருகின்றனர். உண்மையை உணர்ந்து கொள்ளக்கூடிய நீதிபதிகள் இருப்பார்கள் என்பதில் எனக்கு நீதித்துறையின் மீது முழு நம்பிக்கை உள்ளது. நாங்கள் ஆதாரங்களை மக்கள் முன் சமர்ப்பிப்போம். என்னிடம் உள்ள ஏராளமான ஆதாரங்களின் அடிப்படையில் பார்த்தால், நான் பத்து முறை விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும்," என்று அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/crime/sexual-assault-by-claiming-to-be-her-boss-10-year-jail-term-for-tehelka-editor-tarun-tejpal




