தஞ்சாவூர், தன்னை தாக்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரின் கன்னத்தில் அறைந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தஞ்சையில் நடந்த இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- வி.சி.க.வினர் சாலை மறியல் தஞ்சை ரெயில் நிலையம் முன்பு வி.சி.க. சார்பில் அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்த நாள் மற்றும் மாநாடு தொடர்பான விளம்பர பேனர் வைக்கப்பட்டு இருந்தது. அனுமதியின்றி அந்த விளம்பர பேனர் வைக்கப்பட்டிருந்ததாக அந்த பேனரை நேற்று மாநகராட்சி அலுவலர்கள் அகற்றினர். இதை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு வி.சி.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அகற்றிய பேனரை அதே இடத்தில் மீண்டும் வைக்க வேண்டும் எனக்கூறி, மாநகராட்சி அலுவலகம் எதிரே சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். போக்குவரத்து நெரிசல்-வாக்குவாதம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மேற்கு போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் பேனரை மீண்டும் வைத்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என வாக்குவாதம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த ஏராளமான பொதுமக்கள் வழிவிடுமாறி கூறி வி.சி.க.வினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானம் இதேபோல அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரும் வழிவிடுமாறு கூறியதால் வி.சி.க.வினர் அந்த வாலிபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அந்த வாலிபரை சமாதானப்படுத்த முயன்றார். தன்னை சமாதானப்படுத்திய போலீசாரிடம், அந்த வாலிபர், தான் வேலைக்கு செல்ல வேண்டும். நான் வேலைக்கு செல்லாவிட்டால் என்னுடையை சம்பளத்தை யார் தருவார்கள்? எனக்கேட்டு வாக்குவாதம் செய்தார். அப்போது போலீசார், வாலிபரிடம் அமைதியாக இருக்கும்படி கூறினர். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரின் கன்னத்தில் அறைந்த வாலிபர் இது தொடர்பாக போலீசாருக்கும், அந்த வாலிபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த வாலிபரை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் ரஹீம் தாக்கினார். உடனே ஆவேசமான அந்த வாலிபர் பதிலுக்கு அப்துல் ரஹீமின் கன்னத்தில் அறைந்தார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், அந்த இளைஞரை குண்டுக்கட்டாக தூக்கி ஜீப்பில் ஏற்றி மேற்கு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/case-registered-against-a-young-man-who-slapped-a-special-sub-inspector-who-had-assaulted-him




